ஒரு ரூபாய் செலவில் ரோஜா செடிகளில் வரக் கூடிய அத்தனை நோய்களையும் சரி செய்து, ரோஜா பூக்களை கொத்து கொத்தாக பூக்க வைத்து விடலாம்.

rose
- Advertisement -

ரோஜா செடியை நர்சரியில் இருந்து வாங்கி வரும் போது நன்றாக தளதளவென்று பெரிய பெரிய பூக்களுடன் இருக்கும். ஆனால் வீட்டில் கொண்டு வந்து வைத்ததுடன் பூக்கவும் பூக்காது அதில் ஏகப்பட்ட பூச்சிகள் வந்து மொட்டுக்கள் வைக்காமல் செடிகள் கருத்து வீணாகி விடும் இப்போது இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு எளிய தீர்வை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

நர்சரியை பொறுத்த வரையில் அதிகப்படியான உரம் பூச்சிக் கொல்லி போன்றவற்றை கைவசம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு விதமான பிரச்சனைக்கும் அதற்கேற்ற உரத்தையோ அல்லது பூச்சிக்கொல்லையோ தெளித்து செடிகளை வளமாக வைத்திருப்பார்கள். வீட்டில் நாம் வளர்க்கும் ஒன்று இரண்டு செடிகளுக்கு எல்லாம் இது போல் இத்தனை உரங்கள் பூச்சிக்கொல்லிகளை விலை கொடுத்து வாங்க முடியாது. அதற்கான ஒரு எளிய பூச்சிக் கொல்லி மருந்தை தான் இப்போது நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த பூச்சிக்கொல்லி தயாரிக்க நாம் அனைவர் வீட்டிலும் வேப்பெண்ணை கட்டாயமாக பயன்படுத்துவோம் அதில் ஒரு 50 மில்லி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது இந்த உரத்திற்கு ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து வைத்திருக்கும் வேப்ப எண்ணெயில் கலந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

வேப்பெண்ணையில் ஷாம்பு எதற்காக கலக்க வேண்டும் என்று தோன்றலாம். வேப்பெண்ணையை நீங்கள் தண்ணீரில் நேரடியாக கலக்கும் போது எண்ணெய் தண்ணீருடன் கலக்காது. இதில் கொஞ்சமாக ஷாம்புவை கலந்து வேப்பனையை நன்றாக கலந்தால் ஒரு கட்டியான பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். ஆனால் ஷாம்பு கொஞ்சமாக தான் கலக்க வேண்டும் அதிகம் சேர்க்க கூடாது. அதன் பிறகு அதில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக குலுக்கி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை செடிகளுக்கு அடித்து விடுங்கள்.

- Advertisement -

இது செடிகளுக்கு அப்படியே ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி லேசாக தெளித்து விட்டால் போதும். இந்த ரோஜா செடியில் வரும் மாவு பூச்சி, இலை அழுகல், இலைகள் வாடி உதிர்ந்து விடுதல், செடியில் மொட்டு வைத்து பூக்கள் பூக்காமல் உதிர்வது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பூச்சிக்கொல்லி நல்ல தீர்வாக இருக்கும்.

இனி இது போன்ற பிரச்சனைகளுக்கு அதிக செலவு செய்து பூச்சிக்கொல்லிகள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. நான் வீட்டிலேயே நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து சலம் இல்லாமல் சுலபமாக சரி செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு ரோஜா செடிகளில் பூச்சி தொல்லையா? இலைகளை சுருங்க செய்து, மொட்டுக்களை வளர விடாமல் செய்யக்கூடிய இந்த பூச்சியை எளிதாக வீட்டிலேயே எப்படி விரட்டுவது?

இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் உள்ள ரோஜா செடியின் பூச்சி விரட்டுவது குறித்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வளர்க்கும் ரோஜா செடிக்கு இதை கொடுத்து பாருங்க. செடியில் உள்ள அனைத்து நோய்களும் சரியாகி கொத்துக் கொத்தாக பூக்கள் பூத்து உங்கள் ரோஜா செடி பார்க்கவே அழகாக இருக்கும்.

- Advertisement -