Carrot 65 : ப்யூர் வெஜிடபிள் கேரட் 65 ரொம்ப ருசியாக வீட்டில் எளிதாக எப்படி செய்வது?

carrot-65_1_tamil
- Advertisement -

கேரட் என்றாலே அதன் இனிப்பு சுவை தான் நமக்கு முதலில் தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய இந்த ஒரு காய்கறி கொண்டு சுவையான, ருசியான மொறுமொறு 65 எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்வது? பொதுவாக 65 என்றாலே நான்வெஜ்ஜில் தான் செய்வது வழக்கம், ஆனால் இந்த கேரட் 65 பியூர் வெஜிடபிள் கொண்டு செய்யப்படுவதால் வித்தியாசமான சுவையுடனும், அட்டகாசமான கலருடனும் இருக்கப் போகிறது.

மேலே கிரிஸ்ப்பியாக மொறுமொறுவென்று உள்ளே சாப்பிட்டாக பஞ்சு போலவும் இருக்கக் கூடிய இந்த கேரட் 65 ரெசிபி வீட்டில் எப்படி சுலபமாக தயாரிக்கப் போகிறோம்? என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம் இனி பார்க்க இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ, அரிசி மாவு – ஒன்றரை டீஸ்பூன், கான்பிளவர் மாவு – 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சிக்கன் 65 மசாலா – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொரிக்க – சமையல் எண்ணெய்.

செய்முறை

கேரட் 65 செய்வதற்கு முதலில் கால் கிலோ அளவிற்கு கேரட்டை நன்கு மேல் தோலை சீவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மேற்பாகம், அடிப்பாகத்தை வெட்டி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நாளைந்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு கேரட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள். ஒரு 10 முதல் 15 நிமிடம் மூடி போட்டு வேக விட்டால் நன்கு தண்ணீர் எல்லாவற்றையும் உறிஞ்சி வெந்து வந்திருக்கும். வெந்து வந்த கேரட்டை எடுத்து மசித்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மசித்த கேரட்டுடன் அரிசி மாவு, கான்பிளவர் மாவு, கரம் மசாலா, சிக்கன் 65 மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு இஞ்சி பூண்டு விழுது மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றையும் சேருங்கள். அனைத்தையும் நன்கு மசித்து கலந்து வையுங்கள். இதன் பிறகு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல உப்பு தூவி மறுபடியும் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
1 வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத காரசாரமான ருசியான பூண்டு கார சட்னி எளிதாக எப்படி வீட்டில் அரைப்பது?

பிசைந்து வைத்த இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழ அளவிற்கு உருட்டி எடுத்து வைத்ததும் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு உருண்டைகளையும் போட்டு எல்லா புறமும் நன்கு சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாக, உள்ளே மெத்தென்று மிருதுவாக இருக்கக் கூடிய இந்த கேரட் கோல உருண்டை அல்லது கேரட் 65 செம டேஸ்டியாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் உங்க வீட்டில் கேரட் 65 செஞ்சி பாருங்க ரசித்து, ருசித்து சாப்பிடுவீங்க.

- Advertisement -