10 நாட்களில், 10 வயதை குறைத்து காட்ட ஒரே 1 கேரட் இருந்தால் போதும். நீங்க தங்க சிலையா மாறிடுவீங்க.

face
- Advertisement -

வயதான தோற்றத்தை தள்ளி போட அருமையான ஒரு கிரீம் நம் வீட்டிலேயே குறைந்த செலவில் எப்படி தயாரிப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாகவே அழகாக இருப்பது என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் இளமையான அழகு தோற்றம் என்பது எல்லோரையும் கவரக்கூடியது. உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்றால் இந்த பேக்கை சிரமம் பார்க்காமல் பயன்படுத்தி வாருங்கள். உங்களுடைய முகம் சுருக்கம் இல்லாமல் எப்போதும் பொலிவாக இளமையாகவே இருக்கும்.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு முதலில் கேரட் பொடி தேவை. கேரட் பவுடர் கடைகளில் விற்கின்றது. அதை வாங்கி பயன்படுத்திக் கொண்டாலும் சரி, அல்லது ஃபிரஷ்ஷாக கேரட்டை வாங்கி மேலே இருக்கும் தோலை சீவி துருவி நன்றாக மொறுமொறு என வெயிலில் காய வைத்து இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சலித்து நைசான கேரட் பொடியை எடுத்துக் கொண்டாலும் சரி. அது உங்களுடைய விருப்பம். ஆனால் கட்டாயம் கேரட் பொடி நைசாக நமக்கு தேவை.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் கலர் வாசனை திரவியம் சேர்க்காத ஆலோவேரா ஜெல் – 1 ஸ்பூன், கேரட் பொடி – 1 ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் – 1 உள்ளே இருக்கும் எண்ணெய் மட்டும் சேர்த்து, இந்த 3 பொருட்களையும் நன்றாக அடித்து கலந்தால் சூப்பரான ஜெல் நமக்கு கிடைத்துவிடும். இந்த ஜெல்லை பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த ஜெல்லை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் லேசாக அப்ளை செய்ய வேண்டும். மொத்தமாக பேக் போல போடக்கூடாது. ஒரு சீரம் போல இதை முகத்தில் பயன்படுத்துங்கள். இந்த சீரம் அப்படியே முகத்தில் உறிஞ்சி கொள்ளும். அவ்வளவு தான். முகத்தை கழுவ வேண்டாம். அப்படியே இரவு தூங்க செல்லுங்கள். மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் இந்த ஜெல்லை முகத்தில் போட்டு வர உங்களுடைய இளமை நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். தோல் சுருக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்பே கிடையாது. பார்க்க நீங்க தங்க சிலை போல மாறிடுகிறீர்கள். தோல் சுருக்கம் இருந்தாலும் அந்த சுருக்கம் படிப்படியாக ஒரு சில நாட்களில் குறைந்து விடும்.

இந்த ரெமிடியில் இந்த கேரட் பொடிக்கு பதிலாக, வெறும் கேரட்டை துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கூட பயன்படுத்தலாம். ஆனால் தினம் தோறும் அலோவேரா ஜெல்லுடன் கேரட் சாரை ஊற்றி கலந்து முகத்தில் போட வேண்டும். இதை எடுத்து ஸ்டோர் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு நேரம் கிடைத்தால் கேரட் சாரில் நீங்கள் பேக் போட்டுக் கொள்ளலாம். மேலே சொன்ன குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து 30 நாட்கள் பயன்படுத்தி பாருங்கள். இந்த குறிப்பை பிறகு உங்கள் வாழ்நாளில் நீங்க விடவே மாட்டீங்க. அந்த அளவுக்கு ஒரு நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

- Advertisement -