உங்கள் கையில் இருக்கும் பணத்தை இந்தப் பெட்டியில் வைத்துப் பாருங்கள்! கட்டாயம் வீண்விரயம் ஆகவே ஆகாது. மகாலட்சுமி உங்கள் வசம் ஆகிவிடுவாள்.

நம்மில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை நம் கையில் பணம் தங்காமல் இருப்பது தான். சொல்லப் போனால், பணத்தை சம்பாதிப்பதில் கூட பிரச்சனை கிடையாது. சம்பாதித்த தொகையில் இருந்து, சேமிப்பு எடுத்து வைப்பதில் தான், நம்முடைய திறமையை அடங்கியிருக்கின்றது. நாம நினைச்சா எவ்வளவு காசு வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம்! ஆனால், அதை வீண் விரயம் ஆக்காமல், சொத்து பத்தாக, நகையாக மாற்றக்கூடிய திறமையில் தான் சூட்சமம் இருக்கிறது. உங்கள் கைக்கு வரும் வருமானத்தை, வீண் விரயம் ஆக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான குறிப்பு தான் இது.

cash-box

சில பேர் வீடுகளில் எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், அந்த வருமானமானது மருத்துவமனைக்கு செல்லும். வட்டி கட்டவே பத்தாது. ஒரு நகை வாங்க, வீடு வாங்க என்பதற்காக பத்து ரூபாய் கூட எடுத்துவைக்க முடியாமல், நிறைய பேர் தவித்து வருகிறார்கள். கொஞ்சம் கஷ்டப்படாமல் இந்த பதிவில் சொல்லப்போகும், இந்த பொருட்களை எல்லாம் வாங்கி ஒரு மரப் பெட்டியில் வைத்து, அதில் உங்களது வருமானத்தை ஒரு முறை, எடுத்து வைத்து தான் பாருங்களேன்! கட்டாயம் வீண் விரயம் ஏற்படாது என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு கண் தேங்காய் 1, சிறிய இளநீர் பிஞ்சு(குட்டியா இருக்கும்), மூங்கில் குச்சி ஒன்று, சிறிய கருங்கல், சந்தனக்கட்டை சிறிய துண்டு, துளசி குச்சி ஒன்று, இவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஏதாவது கிடைக்கவில்லை என்றால், கட்டாயம் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு மரப்பெட்டியில் வையுங்கள்.

cash

உங்கள் கைகளுக்கு வரும் ரூபாய் நோட்டை, ஒரு முறை, இந்த பொருட்களை எல்லாம் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ‘இந்த பணமானது வீண் விரயம் ஆகாமல், நல்ல காரியங்களுக்கு மட்டுமே செலவாக வேண்டும். மகாலட்சுமி, எங்களிடம் நிரந்தரமாக தங்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

- Advertisement -

மகாலட்சுமி உங்கள் வசமாகுவாள் என்பதில் சந்தேகமே இல்லை. பணத்தை சேர்ப்பதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களை செய்து உள்ளோம். சித்தர்களால் சொல்லப்பட்ட இந்த ஒரு பரிகாரத்தையும் ஒருமுறை செய்து பார்ப்பதில் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வியாபாரம் ஓஹோவென்று நடக்க, உங்க கடை டேபிள் மேல இதை மட்டும் வெச்சு பாருங்க! வாடிக்கையாள் கட்டாயம் உங்க கடைய தேடித்தான் வருவாங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam athikarikka Tamil. Panam peruga vali Tamil. Panam semikka vazhigal. Panam vara pariharam tamil