கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி கோவில் சிறப்புக்கள்

உலகிற்கு ஒளியாக இருப்பவர் சூரிய பகவான். மனிதர்கள் அனைவரும் உண்ணும் உணவு தானியங்கள் வளர சூரியனின் ஒளி மிகவும் அவசியம். நமது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி நதி பாயும் தஞ்சாவூர் பகுதி இருக்கிறது. இங்கிருக்கும் புனித நகரான கும்பகோணத்தில் சூரிய பகவானே வழிபட்டு, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்ற கும்பகோணம் “அருள்மிகு சக்கரபாணி திருகோவில்” பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சக்கரபாணி கோவில் தல வரலாறு
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் ஸ்ரீ சக்கரபாணி கோவில் ஆகும். தஞ்சையை மையமாக கொண்டு ஆட்சி புரிந்த பல சோழ மன்னர்களால் இக்கோவில் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த கோவிலின் இறைவன் ” சக்கரபாணி ” எனவும், இறைவி “விஜயவல்லி” தாயார் எனவும் அழைக்கப்படுகிறார்கள். புராண, இதிகாசங்களின் படி ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வாதம் செய்ய திருமால் ஏவிய “சக்ராயுதம்” ஜலந்தாசுரன் சேர்த்து பாதாள லோகத்தில் இருந்த அதனை அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது.

சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் “மகாமகம்” திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக்கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தளம் இது.

- Advertisement -

சக்கரபாணி கோவில் தல சிறப்பு

இந்த தலத்தில் உலகிற்கே ஒளியாக இருக்கும் சூரிய பகவானே வழிபட்டு நன்மையடைந்ததால் ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீ சக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.

ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை இக்கோவில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலில் சக்ரபாணி, விஜயவல்லி தாயாரை வணங்கி, பக்தியுடன் கோவிலை பிரதட்சிணம் வந்தால் பிள்ளை பேறு இந்த ஆலய இறைவனின் அருளால் உண்டாகும்.

கோவில் அமைவிடம்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. கும்பகோணம் நகரத்திலிருந்து பல பேருந்துகள், வாடகை வண்டிகள் இக்கோவிலுக்கு இயக்கப்படுகின்றன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கிறது.

கோவில் முகவரி

அருள்மிகு சக்கரபாணி திருக்கோவில்
கும்பகோணம்
தஞ்சவோர் மாவட்டம் – 612 001

தொலைபேசி எண்

435 – 2403284

இதையும் படிக்கலாமே:
சபரிமலை கோவில் இன்று வளர்ந்து நிற்க யார் காரணம் தெரியுமா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chakrapani temple details in Tamil. We also have Kumbakonam Chakrapani temple history in Tamil, Chakrapani temple timings, address, contact number, varalaru in Tamil.