கர்ம பரிகாரம்

- Advertisement -

இந்த உலகில் எந்த ஒரு செயலுக்கும் அதற்கிணையான எதிர் செயல் இருக்கும் என்பது இயற்கை தத்துவம். அந்த வகையில் மனிதர்கள் தற்போதைய வாழ்க்கையில் துன்பப்படுவதற்கு அவர்கள் முற்பிறவியலும் தற்போது உள்ள வாழ்க்கையிலும் செய்த கர்மங்களின் பலன் தான் காரணம் என பாரத நாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்தும் கூறுகின்றன. கர்ம வினைகளால் ஒருவரின் வாழ்வில் பலவிதமான துன்பங்கள் ஏற்படுவதை தடுத்து, நற்பலன்கள் உண்டாக செய்ய வேண்டிய கர்ம பரிகாரம் எவை என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து
கொள்ளலாம்.

கர்ம வினை தீர பரிகாரம்

நாம் நமது முற்பிறவியையும் சரி, இப்பிறவியிலும் சரி தெரிந்தும், தெரியாமலும் செய்த செயல்களுக்கான கர்ம வினை நம்மை அடைந்தே தீரும். எனினும் அந்த கர்ம வினை காரணமாக நமக்கு பாதகங்கள் ஏற்படாமல் இருக்க, நாம் உளமாற நம் குலதெய்வத்திடமும், இறைவனிடமும் நாம் செய்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதாலேயே கர்ம வினையின் கடுமை தன்மை குறைந்து விடும்.

- Advertisement -

ஒரு தீமை செய்தால் அதை ஈடுசெய்ய ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்கிற இயற்கை தத்துவத்தின் அடிப்படையில் தினந்தோறும் ஒரு யாசகருக்கோ அல்லது ஏழைக்கோ அன்னதானம் செய்வது சிறப்பு. அப்படி செய்ய இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே பறவைகளுக்கு தானியங்களும், பருகுவதற்கு குடிநீரும் வைப்பதாலேயே கர்ம வினைகள் தீரும்.

நாம் என்ன தெய்வத்தை வணங்கினாலும் நமக்கு காவல் தெய்வமாக இருப்பது நமது குலதெய்வம் தான். எனவே வீட்டில் தினந்தோறும் காலையிலேயே எழுந்து குளித்து, முடித்துவிட்டு இரண்டு மண் அகல் விளக்குகளில் பசுநெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்து வந்தாலே கர்ம வினைகள் கரைந்து, நமக்கும் நம் குடும்பத்திற்கும் நற்பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

தினந்தோறும் வீட்டில் மதிய உணவு சமைத்த பிறகு அதை யாரும் உண்பதற்கு முன்பாக காகங்களுக்கு சிறிது வைத்துவிட்டு உண்பதாலும் கர்ம வினை தீர்ந்து நன்மைகள் ஏற்படும். உங்கள் வீட்டினருகே சிறு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு இனிப்பு, பால் போன்றவற்றை வாங்கித் தருவதும் சிறந்த கர்ம பரிகாரமாக உள்ளது.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவன் கோயில்களுக்கு சென்று, அங்கு எறும்பு புற்று இருக்கும் பட்சத்தில் அந்த எறும்புகளுக்கு அரிசி மாவு, வெள்ளம் போன்றவற்றை உணவாக கொடுத்து வருவதாலும் உங்களின் பூர்வ ஜென்ம மற்றும் தற்போதைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கின்ற கர்ம வினைகள் தீரும்.

வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று, சிவபெருமானையும் அம்பாளையும் வழிபாடு செய்த பிறகு கோயிலில் இருக்கின்ற கோசாலையில் பசுக்களுக்கு அகத்திக்கீரை, அருகம்புல் போன்றவற்றை உண்ணக் கொடுப்பதும் கர்ம வினை தீர உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில், நவக்கிரகங்களையும் அந்த நவகிரகங்களின் அதிதெய்வங்களையும் வழிபாடு செய்து வருவதாலும், கர்ம வினைகள் குறைந்து, நம் வாழ்விலும், நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையிலும் பாதகமான பலன்கள் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -