சந்திர கிரகண பரிகாரம்

- Advertisement -

வானில் நடக்கின்ற ஒரு இயற்கை நிகழ்வு தான் சந்திர கிரகணம் ஆகும். ஒரு வருடத்திற்கு சராசரியாக நான்கு சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சந்திர கிரகணம் என்பது நம் இந்திய மக்களின் வாழ்வியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. எந்த ஒரு கிரகண நிகழ்வின் போதும் பூமியில் வாழ்கின்ற மனிதர்களின் மீது எதிர்மறை ஆற்றலின் தாக்கம் ஏற்படுவதாக நமது சாஸ்திரங்கள் கருதுகின்றன. அத்தகைய தாக்குதல்களை தடுக்கின்ற வகையில் சந்திர கிரகணத்தின் பொழுது செய்ய வேண்டிய சந்திர கிரகண பரிகாரம் குறித்து இங்கு நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையேனும் நம் நாட்டில் வருகின்ற சந்திர கிரகணத்தின் பொழுது கிரகண நேரம் ஆரம்பித்தது முதல் அது முடிகின்ற வரை உங்கள் வீட்டிற்குள்ளே அமர்ந்தவாறு கீழ்க்கண்ட மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதிக்க வேண்டும்.

- Advertisement -

யோஸௌ வஜ்ரதரோ தேவ
ஆதித்யானாம் ப்ரபுர்மத!
ஸஹஸ்ரநயனஸ் சந்திரகிரஹ
பீடாம் வ்யபோறது

எனும் இந்த சந்திர கிரகணம் மந்திரத்தை சந்திர கிரகணம் தொடங்கி, முடிகின்ற வரை துதிப்பதால் சந்திர சந்திர கிரகணத்தின் பொழுது பூமியில் ஏற்படுகின்ற கிரகண நிழலின் தீய கதிர்வீச்சால் நமக்கு உடலளவிலும் மனதளவிலும், ஆன்மா அளவிலும் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும். சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திர கிரகணத்தின் பொழுது இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கும். திட சித்தம் உண்டாகும்.

- Advertisement -

வேறு எந்த மந்திரங்கள் தெரியாவிட்டாலும் சந்திர கிரகணத்தின் பொழுது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் “ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமச்சிவாய, ஓம் சரவணபவ, ஓம் சந்திராய நமஹ, ஓம் ராகு – கேதுவே நமஹ” போன்ற மிகவும் எளிய மந்திரங்களை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபாடு செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிக்க முடியாதவர்கள் இதிகாச புராணங்களை படிப்பது போன்றவற்றை இந்த சந்திர கிரகணம் நேரத்தில் செய்வதால் உங்களுக்கு தெய்வீக அருட்கடாட்சம் பெருகும்.

பொதுவாக சந்திர கிரகணம் ஏற்படுகின்ற திதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அந்த நிதி நட்சத்திரங்களுக்குரிய சந்திர கிரகண சாந்தி பரிகாரத்தை வேதியர்களைக் கொண்டு செய்து கொள்ள வேண்டும். சந்திர கிரகண சாந்தி பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் காலையில் குளிக்கின்ற பொழுது அந்தத் தண்ணீரில் சிறிது வேப்பிலை, சிறிது மஞ்சள், சிறிது கல் உப்பு முடிந்தால் மூன்று துணுக்கு தர்ப்பைப் போல் ஆகியவற்றை போட்டு, நன்கு கலந்து அந்த நீரில் குளிப்பதால் சந்திர கிரகண சாந்தி பரிகாரம் செய்ததற்கு சமமாகும்.

- Advertisement -

மறைந்த நமது முன்னோர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு இயற்கை நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும். எனவே சந்திர கிரகணம் முடிந்த பிறகு அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உங்கள் முன்னோர்களுக்கு குளக்கரையில் அல்லது கடற்கரையில் வேதியர்களை கொண்டு முறைப்படி தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை அளிக்க வேண்டும். இந்த சடங்குகளை செய்த அந்தணர்களுக்கு உங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அனைத்து தோஷ பரிகாரங்கள்

பொதுவாக எந்த ஒரு சந்திர கிரகணமும் ஒரு குறிப்பிட்ட தின திதி, நட்சத்திரம் போன்றவற்றில் நிகழும் சந்திர கிரகணம் நிகழ்கின்ற இந்த திதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், கிரகணம் முடிந்த பிறகு அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று, இறை வழிபாடு செய்த பிறகே காலை உணவை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் சந்திர கிரகண ( Chandra grahan pariharam in Tamil ) நேரத்தில் ஏற்பட்ட தீய கதிர்வீச்சால் உண்டான சந்திர கிரகண தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -