சந்திர கிரகண சமயத்தில் ஏற்படும் பிறப்பு, இறப்பு ஆகியவற்றிற்கான பரிகாரம்

Chandra graganam

சந்திர கிரகணம் என்பது வானில் நிகழும் ஒரு அதிசய நிகழ்வாகும். குளிர்ச்சியான ஒளியை பூமிக்கு வழங்கும் சந்திரனின் சந்திர கிரகணத்தை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை தவிர அனைவரும் வெறும் கண்களால் கண்டு களிக்கலாம். பொதுவாக சந்திர கிரகணம் என்பது ஒரு நன்மையான காலமல்ல என்றாலும், அத்தகைய காலத்தில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் அதற்காக செய்ய வேண்டிய காரியங்களை இங்கு காண்போம்.

Grahanam

குழந்தை பிறப்பு

குழந்தை பிறப்பு என்பது ஆண்டவனுக்கே தெரியாது என்று கூறுவார்கள். பொதுவாக எல்லா பெற்றோர்களும் தங்களின் குழந்தைகள் நல்ல ஒரு நாளில் பிறக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் ஒரு சில கர்பமடைந்திருக்கும் பெண்களுக்கு இந்த சந்திர கிரகண காலத்தில் குழந்தை பிறந்து விடும் நிலை ஏற்படுகிறது. இக்காலத்தில் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு தீய பாதிப்பு இருப்பதாக கருதுபவர்கள், குழந்தைக்கு ஒரு வயதானவுடன் ராகு மற்றும் கேது பகவான் உள்ள கோவிலுக்கு சென்று சாந்தி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது. மேலும் ஏழை குழந்தைகளுக்கு உணவு, உடை மற்றும் பாட புத்தகங்களை தானமாக அளிப்பதால் சந்திர கிரகணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அந்த தோஷம் நீங்கும்.

இறப்பு

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நீதி. இந்த மரணம் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் பௌர்ணமி தினத்தில் சந்திரனின் ஈர்ப்பு விசையின் தாக்கம் பூமியின் மேல் அதிகம் இருப்பதால், நீண்ட காலமாக, படுத்த படுக்கையாக, ஜீவ மரண போராட்டமாக உயிர் வாழ்பவர்கள் இந்த பௌர்ணமி தினத்தில் இறப்பது அதிகம். அதுவும் சந்திர கிரகணம் பெரும்பாலும் இந்த பௌர்ணமி தினத்திலேயே வருகிறது. எனவே இத்தகைய தினத்தில் இறப்பு நிகழ்ந்தால் அந்த வீட்டில் 40 நாட்களுக்கு பஞ்ச தீப எண்ணெய் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மேலும் மூன்று மாதங்கள் கழித்து அந்த வீட்டில் சாந்தி ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.

- Advertisement -

chandra grahanam

மந்திரம் ஜெபித்தல்

கிரகணங்கள் பொதுவாக கெடுதலான அதிர்வுகளை வெளிப்படுத்தவல்லது என கருதப்பட்டாலும், ஆன்மீக விடயத்தில் நம்மை மேன்மை படுத்திக்கொள்ள கிடைக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும். இந்த சந்திர கிரகண வேளையின் போது ஒரு தர்பை புல்லால் ஆன ஆசனம் அமைத்து, அதில் சம்மணமிட்டு அமர்ந்து, உங்களுக்கு குருமுகமாக தீட்சை தரப்பட்ட மந்திரங்களை ஆயிரம் மற்றும் லட்சம் உரு ஜபிக்க நீங்கள் நினைத்த காரியம் சித்திக்கும். தீய சக்திகளை அழிக்கும் மந்திரங்களை இந்நேரத்தில் ஜெபித்தால் அவை ஒழியும். கிரகண நாயகர்களான ராகு மற்றும் கேது கிரகத்திற்குரிய மந்திரங்களை ஜெபிப்பதால் அக்கிரகங்களால் ஏற்பட இருந்த கேடான பலன்கள் நீங்கும்.

ராகு கேது மந்திரம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

English Overview:
Here we discussed about the pariharan which needs to be done if there is a birth or death during Grahanam time in Tamil.