சந்திர திசை பரிகாரம்

chandra thisai pariharam in tamil
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் திசை என்பது ஒரு குறிப்பிட்ட கிரகம் ஒரு ஜாதகருக்கு பலன்களை கொடுக்கும் காலத்தை குறிப்பதாகும். நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்குமான திசை காலம் என்பது வேறுபடும். அந்த வகையில் சூரிய திசைக்கு அடுத்து வருகின்ற திசை சந்திர திசையாகும். இந்த சந்திர திசையில் எல்லா கிரகங்களின் புக்திகள் நடைபெறும் பொழுது நாம் செய்ய வேண்டிய சந்திர திசை பரிகாரங்கள் ( Chandra thisai pariharam in Tamil ) என்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திர திசை பரிகாரங்கள்

ஜாதகத்தில் சந்திர திசை காலத்தில் சந்திர புக்தி என்பதே சுமார் 10 மாத காலம் வரை நடைபெறும். இந்த சந்திர புக்தி நடைபெறும் பொழுது ஒவ்வொரு திங்கட்கிழமை தினத்தன்றும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக வயதான பெண்களுக்கு பச்சரிசியை தானம் செய்து வருவதால் சந்திர புக்தி காலத்தில் சந்திர பகவானின் நல்லருளை பெற முடியும்.

- Advertisement -

ஒரு நபரின் ஜாதகத்தில் நடைபெறுகின்ற சந்திர திசையில், செவ்வாய் புக்தி என்பது 7 மாத காலம் வரை நடைபெறும். செவ்வாய் புக்தி நடைபெறும் பொழுது ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் உங்கள் சக்திக்கு ஏற்ப, தோட்டக்கலை வேலை செய்யும் நபர்களுக்கு காலை 9 மணி முதல் 10 மணி குள்ளாக ஈய பாத்திரங்களை தானமாக வழங்குவதால், சந்திர திசையில் நடைபெறும் செவ்வாய் புக்தியில் ஜாதகருக்கு நற்பலன்கள் உண்டாகும்.

ஜாதகப்படி ஒருவருக்கு நடைபெறுகின்ற சந்திர திசையில் ராகு புக்தி என்பது ஒன்றரை ஆண்டு காலம் வரை நடைபெறும். இந்த ராகு புக்தி நடைபெறும் காலத்தில் திங்கட்கிழமைகள் தோறும் காலை 7 மணி முதல் 9 மணிக்குள்ளாக ஆடுகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும். மேலும் மனநலம் குன்றியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்வதால் சந்திர திசையில் ராகு புக்தி நடைபெறும் பொழுது நன்மையான பலன்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

- Advertisement -

சந்திர திசை குரு புக்தி என்பது சுமார் 1 வருடம் 4 மாத காலம் வரை நடைபெறும். இந்த குரு புக்தி காலத்தில் திங்கட்கிழமைகள் தோறும் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு அந்தணருக்கு ஒரு தேங்காயை தானம் வழங்கி வர வேண்டும். சந்திர திசையில் சனி புக்தி என்பது சுமார் 1 வருடம் 7 மாத காலம் வரை நடைபெறும் இந்த சனி புக்தி நடைபெறும் காலங்களில் திங்கட்கிழமைகள் தோறும் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு காலை உணவை தானமாக வழங்க வேண்டும்.

சந்திர திசையில் புதன் புக்தி என்பது சுமார் 1 வருடம் 5 மாத காலம் வரை நடைபெறும். இந்த புதன் புக்தி நடைபெறுகின்ற காலங்களில், திங்கட்கிழமைகள் தோறும் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள்ளாக ஏதேனும் ஒரு வகை ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளுக்கு உண்ண தீவனம் கொடுப்பது சிறப்பு. சந்திர திசையில் கேது புக்தி என்பது சுமார் 7 மாத காலம் வரை நடைபெறும் இந்த கேது புக்தி காலத்தில் திங்கட்கிழமைகள் தோறும் பசித்த ஏழை, எளியவர்களுக்கு உங்கள் பொருளாதார சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்வது கேது புக்தியில் நன்மையான பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

- Advertisement -

சந்திர திசையில் சுக்கிர புக்தி என்பது சுமார் 1 வருடம் 8 மாத காலம் வரை நடைபெறும். இந்த சுக்கிர புக்தி காலத்தில் திங்கட்கிழமைகள் தோறும் காலை 11 இல் இருந்து 12 மணிக்குள்ளாக கோயில்களில் பூஜை செய்வதற்கான சாம்பிராணி பொட்டலங்களை வாங்கி கொடுப்பது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: மாங்கல்ய தோஷம் பரிகார கோயில்

சந்திர திசையில் சூரிய புக்தி என்பது சுமார் 6 மாத காலம் வரை நடைபெறும் இந்த சூரிய புக்தி காலத்தில் திங்கட்கிழமைகள் தோறும் காலை 10 மணியிலிருந்து பதினொரு மணிக்குள்ளாக யாருக்கேனும் முருங்கைக் காய்கள் வாங்கி கொடுக்கலாம். அது இயலாதவர்கள் நெய் அல்லது தீபம் ஏற்ற எண்ணையை வாங்கி தானம் கொடுப்பது சந்திர திசை ( Chandra thisai pariharam in Tamil ) சூரிய புக்தியில் நன்மையான பலன்களை பெற்றுத் தர உதவும்.

- Advertisement -