உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் பூமி லாபம் உண்டு தெரியுமா?

chandhiran

ஜோதிடத்தில் பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் தேவ கிரகங்கள் எனப்படுகின்றன. இதில் சந்திரன் மட்டும வளர்பிறை காலத்தில் முழுமை அடைந்தும், தேய்பிறை காலத்தில் தேய்ந்தும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு கிரகமாகக் இருக்கிறது. சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் நன்மையான பலன்களும், தேய்பிறை சந்திரனாக இருக்கும் பட்சத்தில் பாதகமான பலன்களையும் தருகிறது. இத்தகைய சந்திரன் ஜாதகத்தில் ரத்தம் மற்றும் பூமிக்கு காரகத்துவம் வகிக்கும் செவ்வாய் கிரக தோடு இணைந்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Lord-Chandra

ஒரு நபரின் ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திர கிரகமும், பூமி காரகனாகிய செவ்வாய் கிரகமும் இணைந்து ஜாதக கட்டத்தில் இருக்கும் 12 வீடுகளில் எங்கே இருந்தாலும் அந்த ஜாதகருக்கு சந்திர மங்கள யோகத்தை உண்டாக்குகிறது. ஜாதகத்தில் இந்த சந்திரன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் இணைந்து இருக்கும் வீடு அல்லது ராசி இரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்திற்கு உச்ச வீடாகவோ அல்லது இரண்டு கிரகங்களுக்கும் நட்பு வீடாகவோ இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இத்தகைய கிரக அமைப்பு கொண்ட ஜாதகர்கள் பல விதமான திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். நல்லவனுக்கு நல்லவனாகவும், வல்லவனுக்கு வல்லவனாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள். பலவித கலைகளை கற்றியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்திலும் துணிந்து செயல்படக்கூடிய தைரிய உணர்வு அதிகம் இருக்கும். சந்திரன் நீர் தன்மையை குறிக்கிறது. செவ்வாய் ஆயுதம் மற்றும் நெருப்பு தன்மையை குறிக்கிறது. எனவே நீர், ஆயுதம் மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில்கள் மூலம் இந்த ஜாதகர்கள் சிறந்த லாபங்களை ஈட்டுவார்கள்.

sevvai

மருத்துவக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை தயாரிப்பது, அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் மிகுந்த பொருள் ஈட்டுவார்கள். சிலர் சிலர் கடல் சார்ந்த தொழில்கள், வியாபாரங்கள் செய்து சிறந்த செல்வம் சேர்ப்பார்கள். செவ்வாய் பகவானின் அருள் ஏற்படுவதால் நிலங்களின் சேர்க்கையும், அந்த நிலங்களை விற்பதின் மூலம் பெருவாரியான பணவரவு இந்த ஜாதகர்களுக்கு ஏற்படும். ஒரு சிலர் வாகனங்களை வாங்கி விற்பதன் மூலமும் செல்வம் ஈட்டுவார்கள். சிலருக்கு பெண்கள் மற்றும் சகோதரர்களால் இவர்களுக்கு நன்மைகல் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் இவை இருந்தால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandran sevvai serkai in Tamil. It is also called as Chandra mangala yogam in Tamil or Chandra graha palangal in Tamil or Sevvai graham palangal in Tamil.