காரியத் தடை நீங்க சதுர்த்தி வழிபாடு

chathurthi vazhipadu
- Advertisement -

விநாயகர் வழிபாட்டிற்கு மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை தான் பெரும்பாலும் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள். அதே போல் திதிகளில் சதுர்த்தி திதி விநாயகரை வழிபட மிகவும் உகந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபடும் போது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நாளைய தினம் வரக்கூடிய சதுர்த்தி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

நாளைய தினம் 12 அம் தேதி. இந்த எண்ணை கூட்டினால் மூன்று வரும் இது குபேரருக்குரிய எண்ணாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார், சுக்கிரன் இருவருக்கும் உகந்த தினம். இந்த நாளில் வரக் கூடிய சதுர்த்தி திதயை சுக்கிர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்வில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் தடைகளை தகர்த்தெறியவும் இந்த சுக்கிர சதுர்த்தியில் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

காரிய தடை சுக்கிர சதுர்த்தி வழிபாடு

நாளைய தினம் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபாட்டை தொடங்க வேண்டும். விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். காலை முதல் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இது அவரவர் உடல் நிலையை பொறுத்து.

நாளைய தினம் மாலையில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு விநாயகர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக கொழுக்கட்டைகளை வைக்க வேண்டும். அதே போல விநாயகருக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தேனையும் நெய்வேதியமாக வைத்து விடுங்கள். அடுத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி இந்த நெய்வேத்தியத்தை வைத்து விநாயகர் துதி, விநாயகர் அகவல் என உங்களுக்கு தெரிந்ததை படியுங்கள்.

- Advertisement -

இத்துடன் ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம் என்ற இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லும் போதும் ஒரு அருகம் புள்ளை விநாயகருக்கு முன்பு வையுங்கள். இந்த வழிபாடு செய்யும் போது நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். இந்த வழிபாட்டை செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இப்போது விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்த கொழுக்கட்டையை உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் அல்லது கோவிலுக்கு சென்று அங்கு யாருக்கேனும் தானமாக தான் கொடுக்க வேண்டும். இந்த கொழுக்கட்டையை நீங்கள் சாப்பிடக் கூடாது. ஆனால் தேனை நீங்கள் தாராளமாக சாப்பிடலாம் அதை மற்றவர்களுக்கு தர வேண்டாம்.

- Advertisement -

இந்த வழிபாடு முடிந்த பிறகு வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு உங்களுடைய தடைகள் அனைத்தும் தூள் தூளாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயை சூரை விட்டு வந்து விடுங்கள். இந்த வழிபாடு உங்களுடைய பிரச்சனைகளை நிச்சயம் தகர்த்தெறிந்து விடும்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்க செய்ய வேண்டியது

நாளைய தினம் விநாயகரை இதுபோல வழிபடும் போது நம்முடைய துன்பங்கள் நீங்கி, நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் வெற்றி பெற்று, வாழ்வில் சகல செல்வத்துடன் வாழ்வதற்கான யோகத்தை விநாயகர் அருள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -