ஜோதிடம் : ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் தரும் பலன்கள் என்ன தெரியுமா?

chevvai-bagawan

ஜோதிட சாஸ்திரங்களில் நவகிரகங்களில் சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு அடுத்ததாக செவ்வாய் கிரகம் வருகிறது. ஒரு மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, ரத்தம், வீரம், பூமி லாபம் போன்றவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த செவ்வாய் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலைகளில் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

sevvai

ஜாதகத்தில் ஒரு நபருக்கு செவ்வாய் கிரகம் மேஷம், விருச்சிகம் போன்ற செவ்வாய் பகவானின் சொந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருக்க பெற்று அந்த ராசிகள் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சூரியன் மற்றும் சுப கிரகமான குரு கிரகம் போன்றவற்றின் பார்வை பெறுமானால் அந்த ஜாதகர் மிகவும் சுறுசுறுப்பு தன்மை கொண்டவராக இருப்பார். உடலில் சிறந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டவராக இருப்பார். எந்த ஒரு செயலிலும் மிகுந்த வேகம் இருக்கும். அரண்மனை போன்ற தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீடுகளில் வசிப்பவராக இருப்பார். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஏராளமான நிலம், தோட்டம் போன்றவற்றை சொந்தமாக கொண்டிருப்பார். இந்த ஜாதகருக்கு விவசாயம் மூலம் மிகுந்த வருமானம் கிடைக்கும்.

செவ்வாய் உச்சமடையும் ராசியான மகரம் ராசியில் செவ்வாய் இருக்க பெற்று, அந்த செவ்வாய் சுப கிரகங்களின் பார்வை பெற்றால் அந்த ஜாதகர் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பார். தனக்காக உயிரை கொடுக்க துணியும் விசுவாசமுள்ள நண்பர்கள், விசுவாசிகளை பெறுவார்கள். இதில் ஒரு சிலர் ஒரு அரசாங்கத்தையே எதிர்க்கும் போராட்ட குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். ராணுவத்தில் தலைமை பதவிகளை பெறும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். போர்க்குணம் அதிகம் என்பதால் எப்படிப்பட்ட போர்களிலும் எதிரிகளை பந்தாடுவார்கள்.

பொதுவாக எந்த ஒரு நபரின் ஜாதகத்திலும் செவ்வாய் பலம் பெற்றிருப்பது அவசியம் ஆகும். அப்படி செவ்வாய் பலம் பெற்றிருக்கா விட்டாலும் மிதுனம், கன்னி, கடகம் போன்ற பகை மற்றும் நீச்ச ராசிகளில் செவ்வாய் கிரகம் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நீச்சம் அடையும் செவ்வாய் ஒரு ஜாதகருக்கு ரத்தத்தில் வீரியமின்மையை உண்டாக்கி அந்த ஜாதகர் பல நோய்கள் பாதிப்பால் அவதியுறும் நிலை உண்டாகிறது. ஆயுதங்கள், விபத்துகள் போன்றவற்றால் காயங்கள் ஏற்படவும் வழிவகுக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கான பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chevvai bhagavan jothidam in Tamil. It is also called as Chevvai bhagavan in Tamil or Sevvai neecham in Tamil or Sevvai graham palangal in Tamil or Sevvai gragam jodhidam in Tamil.