ஜோதிடம் : உங்களுக்கு செவ்வாய் திசை காலத்தில் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

sevvai-bhagawan

நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு உடல் வலிமை, ரத்த ஒட்டம், நோய் எதிர்ப்பு திறன், அதிகாரப் பதவி, உடன் பிறப்பு, நிர்வாக திறன் போன்றவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். நவகிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகமான செவ்வாய் தனது தசா புக்தி காலங்களில் பல்வேறு விதமான நற்பலன்களை தருவார். அப்படியான செவ்வாய் பகவானின் “செவ்வாய் திசை பலன்கள்” குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் திசை என்பது சுமார் 7 வருடங்கள் காலம் நடைபெறும். செவ்வாய் பகவான் இரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவராவார். மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகள் செவ்வாயின் ஆட்சி வீடுகள் ஆகும். மகரம் செவ்வாயின் உச்ச வீடாகவும், கடகம் செவ்வாயின் நீச்ச வீடாகவும் இருக்கிறது. செவ்வாய் ஒரு பாவகிரகமாக இருப்பதால் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3,6,10,11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் நன்மையான பலன்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய செவ்வாய் கிரகத்திற்குரிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை முதல் திசையாக வரும். ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நன்கு பலம் பெற்று குழந்தை பருவத்தில் செவ்வாய் திசை நடைபெற்றால் அந்த குழந்தைக்கு பலம் வாய்ந்த, நோய்கள் எளிதில் அணுகாத உடலமைப்பு ஏற்படும். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் அக்குழந்தைகளுக்கு உண்டாகும்.

sevvai

ஜாதகரின் இளம் பருவ வயதில் செவ்வாய் திசை நடைபெற்றால் கல்வியில் மேன்மையான நிலையை அடைவார். நல்ல உடல் பலம் இருப்பதால் விளையாட்டு துறைகளில் மிக பெரும் சாதனை செய்யும் அமைப்பு ஏற்படும். நியாய உணர்வு, வீர பராக்கிரமம் மற்றும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் ஜாதகர்களுக்கு ஏற்படும்.

- Advertisement -

sevvai kiragam

ஜாதகரின் மத்திம வயதுகளில் செவ்வாய் திசை நடக்குமானால், அந்த ஜாதகர் சிறந்த நிர்வாக திறன் பெற்றவராக இருப்பார். அரசாங்கத்தில் மிக உயர் பதவிகளை வகுக்கும் யோகம் ஏற்படும். முதுமை காலத்தில் செவ்வாய் திசை நடைபெற்றால் மரணம் குறித்த பயமற்ற நிலை உண்டாகும். பூமி, மனை போன்றவற்றால் அனுகூலம் உண்டாகும், சமுதாயத்தில் மக்களால் மதிப்படக்கூடிய கௌரவமான பதவிகள் பெறும் யோகம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
கடன் தீர ஜோதிட பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chevvai dasa palangal in Tamil. It is also called as Sevvai thisai in Tamil or Sevvai bhagavan in Tamil or Sevvai graham palangal in Tamil or Sevvai thisai enna seiyum in Tamil.