சமையலறையில் அவசியமாகத் தேவைப்படும் சின்ன சின்ன 6 குறிப்புகள். இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க. நீங்கதான் கிச்சன் குயின்.

kitchen1
- Advertisement -

சமையல் அறையில் அன்றாடம் நாம் எத்தனையோ விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அதற்கெல்லாம் தீர்வு பெற வேண்டுமென்றால், இப்படி பயனுள்ள நிறைய குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தானே சமையலில் நாம் குயின் ஆக இருக்க முடியும். சமையலறையில் அனைவருக்கும் தேவைப்படும் படியான பயனுள்ள 6 குறிப்புகள் உங்களுக்காக இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. வாங்க நேரத்தைக் கடத்தாமல் குறிப்பை பார்க்கலாம்.

Tip 1:
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இவைகளை அரைக்கும்போது பார்ப்பதற்கு அழகாக பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் அரைத்து கிண்ணத்தில் மாற்றி கொஞ்ச நேரம் கழித்து விட்டால், அதனுடைய பச்சை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். புதினா சட்னி அரைக்கும் போது அதில் சேர்க்கக்கூடிய புளியை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, 1 ஸ்பூன் லெமன் ஜூஸை சேர்த்து அரைத்தால் புதினா சட்னி நீண்ட நேரம் ஆனாலும் அழகான பச்சை நிறத்திலேயே இருக்கும்.

- Advertisement -

Tip 2:
தோசைக்கல்லில் கருணைக்கிழங்கு வறுவல், சேனைக்கிழங்கு வறுவல், மீன் வறுவல், சிக்கன் வருவல், என்று செய்தால் அந்த தோசைக்கல்லை எண்ணெய் பிசுக்கு போக சுத்தம் செய்வதற்குள், போதும் போதும் என ஆகும். நம்முடைய பாத்திரம் தேய்க்கும் நாரில் எண்ணெய் ஒட்டி பிடித்து பிசுபிசுப்பாக மாறிவிடும். ஃபிரை செய்து முடித்த பின்பு எண்ணெய்ப் பிசுக்கு உள்ள பேன், கடாய் அல்லது தோசைக்கல் எதுவாக இருந்தாலும் எண்ணெய் பிசுக்கு உள்ள அந்த பாத்திரத்தில் முதலில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு அல்லது கான்பிளவர் மாவு தூவி விட்டு ஒரு பேப்பரோ டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்து எடுத்துவிடுங்கள். அதன்பின்பு அந்த தோசைக்கல்லில் சுத்தமாக எண்ணெய் இருக்காது. ஈசியாக தேய்த்து கழுவிக் கொள்ளலாம். (குறிப்பாக மீன், சிக்கன் மட்டன் வறுத்த பின்பு அந்த கடையில் வீசும் வாசம் கூட சீக்கிரம் நீங்கிவிடும்.)

Tip 3:
இட்லி பாத்திரத்திற்கு அடியில் தண்ணீர் கொதித்துக் கொதித்து பாத்திரம் அடிப்பக்கம் ரொம்பவும் மோசமாக கறை படித்து இருக்கும். இப்படி இட்லி பாத்திரம் அடியில் கறைப் பிடிக்காமல் இருக்க என்ன செய்வது? இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றியவுடன் அந்த தண்ணீரில் 1/4 துண்டு எலுமிச்சை பழத்தை போட்டு விடுங்கள். இட்லி பாத்திரம் அடியில் எப்போதும் புதுசு போலவே இருக்கும். தண்ணீர் கொதித்து கொதித்து அடியில் கறை பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

Tip 4:
ரேஷன் பருப்பு சீக்கிரமாக வேக வேண்டும் என்றால் அதில் சிறிய துண்டு கொட்டாங்குச்சி ஓட்டை போட்டு வேக வைக்கவேண்டும். கொட்டாங்குச்சியில் இருக்கும் நாரை எல்லாம் சுத்தம் செய்து போடவேண்டும். பருப்பு வெந்தவுடன் ஞாபகமாக பருப்பிலிருந்து கொட்டாங்குச்சி ஓட்டை நீக்கி விடுங்கள்.

Tip 5:
எதிர்பாராமல் புதிய துணியில் எண்ணெய் கறை பட்டு விட்டால் அதை எப்படி நீக்குவது. கடைப்பட்ட இடத்துக்கு மேலே முகத்தில் போடும் பவுடரை முதலில் தூவி விடுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தண்ணீரில் ஊற்றி கரைத்து அந்தத் தண்ணீரை, எண்ணெய் கறை பட்ட இடத்தில் ஊற்றி கசக்கி விட்டாலே போதும். எண்ணெய் கறை பட்ட தடமே தெரியாது.

Tip 6:
சில சமயம் முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றும் போது, முட்டையுடன் சின்னதாக முட்டை ஓடு கலந்துவிடும். அந்த குட்டி முட்டை ஓடு ஸ்பூனில் எடுத்தாலும் வராது. கையில் எடுத்தாலும் வராது. உங்களுடைய விரலை தண்ணீரில் நனைத்து விட்டு அதன் பின்பு அந்த முட்டை ஓட்டை விரல்களால் எடுத்து பாருங்கள். விரலில் சுலபமாக வந்துவிடும்.

- Advertisement -