சும்மா ஈஸியா போனபோக்குல இந்த சின்ன வெங்காய டிபன் சாம்பார் வைச்சுதா பாருங்களேன்! இட்லி சாம்பார் செய்ய நீங்க தான் பெஸ்ட் குக்ன்னு அவாட் வாங்குவீங்க.

sambar
- Advertisement -

ஆடம்பரமாக சமைத்தால் தான் சமையல் ருசியாக இருக்கும் என்ற எண்ணம் ரொம்ப ரொம்ப தவறு. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக சமைத்தாலும் சமையல் ருசியாக இருக்கும். அதனுடைய பக்குவத்தை மட்டும் சரியாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தான் சமையலின் சூட்சமமே இருக்கிறது. மாங்கு மாங்குன்னு சில பேர் சமைப்பார்கள். உலகத்தில் இல்லாத பொருட்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து சூப்பர் மார்க்கெட்டில் போய் பர்ச்சேஸ் பண்ணி கொண்டு வந்து சமைத்து இறுதியில் ரெசிபி சுவை சொதப்பிவிடும். அப்படி எல்லாம் கிடையாது. மிக மிக சுலபமாக வீட்டில் இருக்கும் சின்ன வெங்காயத்தை வதக்கி போட்டு இப்படி சாம்பார் வைத்து பாருங்களேன். சும்மா சாம்பாரின் எப்படி மனக்கிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

செய்முறை

முதலில் குக்கரில் 1/2 கப் அளவு – துவரம் பருப்பு, தக்காளிப் பழம் – 2, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு பல் தோலுரித்தது – 2, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு இந்த பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி மூன்று விசில் விட்டு வேக வைத்து பருப்பை கடைந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இந்த சாம்பாருக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான தேவையான பொருள் சின்ன வெங்காயம் – 20 லிருந்து 25 பல் அந்த சின்ன வெங்காயத்தை தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து நீர்க்க வைத்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, தோல் உரித்த – சின்ன வெங்காயம், வெந்தயம் – 1/4 ஸ்பூன் போட்டு வதக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய் குறுக்கே கீறியது – 1, நறுக்கிய தக்காளி பழம் – 1, போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். பிறகு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், சாம்பார் தூள் – 2 ஸ்பூன், போட்டு 30 செகண்ட் வரை கலந்து விட்டு உடனடியாக கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றுங்கள்.

புளி கரைசல் நன்றாக கொதித்து பச்சை வாடை நீங்கி வந்தவுடன், உப்பு தேவையான அளவு போட்டு வேக வைத்திருக்கும் பருப்பை இதில் ஊற்றி 1 ஸ்பூன் – வெல்லம் போட்டு சாம்பார் பச்சை வாடை போக கொதிக்க விடவும். சாம்பார் கொதித்து தயாரானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக இதற்கு ஒரு ஸ்பெஷல் தாளிப்பு.

- Advertisement -

2 ஸ்பூன் – நெய்யில், கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 4 பல், வரமிளகாய் – 3, போட்டு தாளித்து இறுதியாக இதில் காஷ்மீரி மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன் போட்டு அப்படியே இந்த தாளிப்பை தயாரான சாம்பார் கொட்டி விட்டால் சூப்பரான கலரான, சுவையாக சாம்பார் தயாராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க அயர்ன் சத்துள்ள இந்த 1 பொடியை சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிடலாமே! ஒருமுறை செய்து வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டு போகாது.

காஷ்மீரி மிளகாய் தூள் இல்லை என்றால் பரவாயில்லை அதை நிறத்திற்கு தான் சேர்த்திருக்கின்றோம். மற்றபடி சாதாரணமாக நெய் அல்லது எண்ணெயில் நீங்கள் இந்த தாளிப்பை போடலாம். இறுதியாக மல்லி தழை தூவி சாம்பாரை பரிமாறி பாருங்கள். சுட சுட இட்லிக்கு மேல இந்த சாம்பாரை வார்த்து சாப்பிட்டால் வேறு என்ன வேண்டும்.

- Advertisement -