முகம் தங்கம் போல ஜொலிக்க சாக்லேட் ஃபேஸ் பேக்

face pack
- Advertisement -

முகத்தை ஜொலிக்க வைக்க பலரும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முன்பெல்லாம் முகத்தை நிறமாக மாற்ற இவ்வளவு மெனக்கிட வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அப்போது உள்ள சூழ்நிலை உணவு தட்பவெட்ப நிலை எல்லாமே வேறு. இப்போது அது அப்படியே தலைகீழாக மாறி விட்டது.

எத்தனை நிறமாக இருப்பவர்கள் கூட சிறிது நேரம் வெளியில் சென்று வந்தாலே போதும் முகம் முழுவதும் கருத்திட்டுகளாக படிந்து விடுகிறது. இத்துடன் முகத்தில் சிலருக்கு எப்போதும் எண்ணெய் பிசுக்கு இருந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இன்றி முகப்பரு போன்ற முகம் தொடர்பான பிரச்சனைகளை இன்று பலரும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதையெல்லாம் சரி செய்ய நாமும் பலவகையில் முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறோம். அந்த வகையில் இந்த அழகு குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் நல்ல பலனை தரக்கூடிய சாக்லேட் ஃபேஸ் பேக் எப்படி போடுவது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

முகத்தை ஜொலிக்க வைக்க சாக்லேட் ஃபேஸ் பேக்
இந்த சாக்லேட் ஃபேஸ் பேக் தயாரிக்க டார்ச் சாக்லேட் அல்லது கோகோ சாக்லேட் இரண்டில் ஏதாவது ஒன்றை 50 கிராம் வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் தரமான தேன் இவையெல்லாம் எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை தயாரிக்க முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அதைவிட ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த சாக்லேட்டை போட்டு தண்ணீரில் வைத்து டபுள் வாயில் முறையில் சாக்லேட்டை இளக வைத்துக் கொள்ளுங்கள். சாக்லேட் நன்றாக இளகிய பிறகு அந்த கிண்ணத்தை வெளியில் எடுத்து வைத்து நன்றாக ஆற விடுங்கள்.

ஆறிய இந்த சாக்லேட் கிரீமில் பால், தேன் இரண்டையும் கலந்து நன்றாக பேஸ்ட் போல கொடுத்துக் கொள்ளுங்கள். சாக்லேட் கீரிம் ஆறுவதற்கு முன்பாக பாலோ தேனோ கட்டாயமாக சேர்க்கக் கூடாது. இது மிகவும் முக்கியம். இப்போது முகத்திற்கு தேவையான கிரீம் கிடைத்து விட்டது.

- Advertisement -

இந்த கிரீமை போடுவதற்கு முன்பாக உங்கள் முகத்தை ஒரு முறை சுத்தம் செய்து விட்டு ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விட்டு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் செய்தால் கூட போதும்.

இதையும் படிக்கலாமே: இப்படி செய்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும்.

அது மட்டும் இன்றி ஏதாவது பங்க்ஷன் அல்லது வெயிலில் வெகு நேரம் அலைந்து திரிந்து வந்தால் உடனே இந்த பேக்கை போட்டு விட்டால் போதும். முகம் பளிச்சென்று பிரகாசமாக மாறி விடும். எளிமையான இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இப்படி ஒரு முறை போட்டு பாருங்க.

- Advertisement -