உங்க தோட்டத்தில் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் செடிகளில் வரக்கூடிய புழுக்களை வீட்டிலேயே எளிதாக எப்படி ஒழித்துக் கட்டுவது?

lemon-citrus-poochi
- Advertisement -

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகையான செடிகளில் புழுக்கள், பூச்சிகள் அதிகம் வர ஆரம்பிக்கும். இது இலைகளை மெல்ல மெல்ல சாப்பிட்டு விடக்கூடிய ஆபத்து நிறைந்த ஒரு பிரச்சனையாக இருக்கும். நம்முடைய வீட்டு தோட்டத்தில் இருக்கும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் செடிகளில் வரக்கூடிய புழுக்களை எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒழித்து கட்டுவது எப்படி? என்பதை தான் இந்த தோட்டக்குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை செடிகளை பராமரிப்பது என்பது கொஞ்சம் கடினம் தான். இதன் வேரானது மேற்புறமாகவே இருப்பதால் அதிகம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் வேர் பகுதியானது அழுகி போய்விடும் அபாயம் உண்டு. மண் எப்போதும் ஈர பதத்துடனும், தளர்வாகவும் இருப்பது நல்லது.

- Advertisement -

போதிய சூரிய வெளிச்சம் இருந்தாலும் பூச்சிகள் தொந்தரவிலிருந்து விடுபடலாம். எனவே அதிக சூரிய வெளிச்சம் படும் இடங்களில் இவ்வகையான மரங்களை வளர்ப்பது நன்மை தரும். சிட்ரஸ் வகை செடிகள் இளமையுடன் இருக்கும் பொழுது சிட்ரஸ் புழுக்கள் வந்து உட்கார ஆரம்பித்து விடும். இது பச்சை இலைகளை எல்லாம் தின்றுவிடும்.

இவ்வகையான புழுக்களை கிளவுஸ் போட்டு கொண்டு கைகளாலேயே எடுத்து அப்புறப்படுத்தி விடலாம். இதனால் செடிகள் இயற்கையாகவே பாதுகாப்பாக இருக்கும். அப்படி இல்லை என்றால் கீழ்வரும் வழிமுறைகளையும் கையாண்டு புழுக்களை சுலபமான முறைகளில் அகற்றி செடிகளை பாதுகாக்கலாம். இயற்கையான பூச்சி விரட்டி என்றால் அது முதலில் வேப்ப எண்ணெயை தான் குறிக்கும். வேப்ப எண்ணெயை போதிய அளவிற்கு தண்ணீரில் நன்கு மிக்ஸ் செய்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் எண்ணெய் வடிவில் கொடுப்பதால் ஈசியாகவே பூச்சிகள் இலைகளை விட்டு ஓடிவிடும்.

- Advertisement -

இலைகளுக்கு மேற்புறம் மட்டுமல்லாமல் அடி புறத்திலும் பூச்சிகள் ஒளிந்து கொண்டிருக்கும் எனவே இலைகளின் அடி புறத்திலும் ஸ்பிரே செய்வது அவசியமாக இருக்கிறது. வேப்ப எண்ணெய் இல்லை என்றால் வீட்டில் வினிகர் இருந்தால் அதையும் நீங்கள் பயன்படுத்தலாம். ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வினிகர் எடுத்துக் கொண்டால், மூன்றரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு புழுக்கள் இருக்கும் எல்லா செடிகளின் மீதும் இதை ஸ்பிரே செய்தால் புழுக்கள் மடிந்து ஒழிந்து விடும்.

இதையும் படிக்கலாமே:
கொத்தமல்லி, புதினா எளிதாக வீட்டிலேயே வளர்ப்பது எப்படி? இது தெரிஞ்சா இனி கடையில கொத்தமல்லி, புதினா வாங்கவே வேண்டாமே! வீட்டிலேயே அறுவடை செய்து கொள்ளலாமே.

அதுவும் இல்லையென்றால் நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் கூட பயன்படுத்தி இந்த வகையான பூச்சிகளை எளிதில் விரட்டி அடிக்க முடியும். பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டால், ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை ஸ்பிரே பாட்டில் அடைத்து வைத்து புழுக்கள் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும் புழுக்கள் காணாமல் போய்விடும். இதை நீங்கள் அதிகாலை அல்லது மாலையில் சூரியன் மறைந்த பிறகு செய்வது நல்லது. இதனால் மற்ற மகரந்த சேர்க்கையை உண்டாக்கக்கூடிய பூச்சிகள் பாதிக்கப்படாமல் இருக்கும். இதர நேரங்களில் இந்த லிக்விடை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -