கொத்தமல்லி, புதினா எளிதாக வீட்டிலேயே வளர்ப்பது எப்படி? இது தெரிஞ்சா இனி கடையில கொத்தமல்லி, புதினா வாங்கவே வேண்டாமே! வீட்டிலேயே அறுவடை செய்து கொள்ளலாமே.

puthina-kothamalli
- Advertisement -

கொத்தமல்லி, புதினா போன்ற இலை வகைகள் நமக்கு அடிக்கடி சமையலுக்கு தேவைப்படுயாக இருக்கிறது. இவற்றையெல்லாம் வீட்டில் வளர்க்க முடியுமா என்ன? என்று யோசிப்பவர்களுக்கு, இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியும் என்று தெரிந்தால் இனி கடைக்கு சென்று கொத்தமல்லி வேண்டும், புதினா வேண்டும் என்று கேட்கவே மாட்டீங்க! கொத்தமல்லி, புதினா செடி வீட்டில் எளிதாக வளர்ப்பது எப்படி? என்பது போன்ற தோட்டக்குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புதினா வளர்ப்பது ரொம்பவே ஈசி தான். புதினா கட்டு வாங்கி வந்து அதில் இருக்கும் கீரைகளை எல்லாம் ஆய்ந்து வைத்து விடுவோம். மீதம் இருக்கும் தண்டுகளை குப்பையில் தான் எரிகிறோம். இதை இனி குப்பையில் எரியக்கூடாது. வாய் அகன்ற ஆறு இன்ச் அளவில் இருக்கக்கூடிய க்ரோ பேக் அல்லது வீட்டில் வீணாக இருக்கின்ற காலி குடங்கள், தண்ணீர் கேன்களை பாதியாக வெட்டி அதில் இயற்கை உரங்களை போட்டு நிரப்பி எளிதாக வளர்க்கலாம்.

- Advertisement -

மண்ணில் இந்த தண்டுகளை வேர் இருக்கும் புறமாக நாலு இன்ச் அளவிற்கு உள்ளே நட்டு வையுங்கள். சாதாரண செம்மண் கலவை உள்ள மண் தொட்டியாக இருந்தாலே போதும். இதற்கென பிரத்தியேக மண் கலவை தேவையில்லை. மேலும் சூரிய வெளிச்சமும் அதிகம் படாத இடங்களில் வையுங்கள். காலை, மாலை இரு வேளையில் தண்ணீர் ஊற்றுங்கள். அரிசி கழுவிய தண்ணீர், பருப்பு கழுவியை தண்ணீர், வாழைப்பழ தோல் ஊற வைத்த தண்ணீர் போன்றவற்றை கொடுத்தால் நன்கு செழித்து கொத்துக் கொத்தாக படர்ந்து வளரும்.

கொத்தமல்லி விதைகளை இதே போன்ற தொட்டிகளில் தூவி அதன் மீது மண்ணை போட்டு மூடாமல், தென்னை நார் கழிவு கொண்டு எல்லா இடங்களிலும் மூடும்படி போட்டு விடுங்கள். விதைகளை போடும் முன்பு ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சீக்கிரம் முளைத்து வரும். இந்த செடி முளைத்து வர பத்திலிருந்து 15 நாட்கள் எடுக்கும். அதுவரை மேலே ஒரு ஈரமான காட்டன் துணியை போட்டு மூடி விடுங்கள்.

- Advertisement -

துணியின் மீது தினமும் இருவேளையும் தண்ணீர் தெளித்து ஈர பதத்துடன் மண்ணை வைத்துக் கொள்ளுங்கள். 15 நாட்களுக்குள் நன்கு செழித்து முளைக்க ஆரம்பித்து விடும். கொத்தமல்லி விதைகள் முளைத்ததும், நீங்கள் மேலே போட்டிருக்கும் துணியை எடுத்து விடலாம். இதற்கும் சாதாரணமான லிக்விட் முறையில் உரங்களை கொடுத்து வந்தால் போதும். பச்சை பசேல் என 30 நாட்களுக்குள் நன்கு முளைத்து விடும்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டு பூச்செடிகள் நல்ல அடர்த்தியான நிறத்தில் பூ பூக்க என்ன செய்யணும்? இது தெரிஞ்சா இனி சமையல் கட்டில் இதை குப்பைன்னு நினைக்கவே மாட்டீங்க!

எல்லா வகையான இலை பயனுள்ள செடிகளுக்கு நல்ல வாய் அகன்ற தொட்டிகளை பயன்படுத்த வேண்டும். மேலும் அதில் ஈரப்பதத்தை எப்பொழுதும் தக்க வைத்திருக்க வேண்டும். வறண்டு போக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெளிச்சம் தேவையில்லை, குறைவான சூரிய வெளிச்சம் இருந்தால் போதுமானது. இந்த வகையில் நீங்கள் கொத்தமல்லி மற்றும் புதினா செடியை விதைத்து முளைக்க செய்தால் ரொம்பவே ஈசியாக முளைத்து வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் வளர்த்து பார்த்து பயன்பெறலாமே.

- Advertisement -