சின்ன வெங்காயம் போட்டு தேங்காய் சட்னி வைக்கணும்னா இப்படித்தான் அரைக்கணும் தெரியுமா?

coconut-chutney-recipe
- Advertisement -

ஹோட்டல் சுவையில் டேஸ்டியான தேங்காய் சட்னி அரைக்க அதில் சில பொருட்களை கூடுதலாக சேர்த்து அரைக்க வேண்டும். தேங்காய் சட்னி கெட்டியாக வைத்தால் சிலருக்கு பிடிக்கும், தேங்காய் சட்னி தண்ணீராக வைத்தால் தான் சிலருக்கு பிடிக்கும். இப்படி இல்லாமல் எப்படி வைத்தாலும் சுவையாக கொடுத்தால் எல்லோருமே சாப்பிடும் படியான அசத்தலான தாளிச்ச சின்ன வெங்காயம் போட்டு தேங்காய் சட்னி எப்படி வைக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 6, சின்ன வெங்காயம் – 15, உடைத்த கடலை – அரை கப், இஞ்சி – ஒரு விரல் நீளம், கருவேப்பிலை – 1 இணுக்கு, பூண்டு பல் – 4, மல்லித்தழை – சிறிதளவு, கல் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – 1/4 ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
சின்ன வெங்காயம் சட்னி செய்வதற்கு முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை மூடி தேங்காயை துருவலில் இட்டு நன்கு பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக தாளிக்க கொஞ்சம் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி மட்டும் எடுத்து வைத்து மீதம் இருக்கும் வெங்காயத்தை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் ஒரு விரல் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். சில பச்சை மிளகாய் நல்ல காரமாக இருக்கும் எனவே பார்த்து கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல மல்லித்தழை இருந்தால் சிறிதளவு சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். இது சுவையை தூக்கி கொடுக்கும். பின்னர் இதனுடன் 4 பல் பூண்டை தோலுரித்து சேருங்கள்.

- Advertisement -

தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு கல்லுப்பாக இருப்பது நல்லது. பின்னர் மிக்ஸியை இயக்கி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்காக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் ஒன்றை காம்பு நீக்கி கில்லி சேர்த்து தாளித்து பின்னர் நீங்கள் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நல்ல முறுவலான பொன்னிறமாக பொரிந்து வர வேண்டும். அதுவரை நன்கு வறுக்க விட்டு பின்னர் அடுப்பை அணைத்து சட்னியில் கொட்டுங்கள். ரொம்பவே சுவையான இந்த வெங்காயம் தாளித்த சின்ன வெங்காயம் சேர்த்த தேங்காய் சட்னி டேஸ்ட்டியாக இருக்கப் போகிறது. நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -