இடுப்புக்கு கீழே முடி வளரவே இல்லையா? அடர்த்தி குறைவா இருக்கா? அப்படின்னா நம்ம பாட்டி சொல்லிக் கொடுத்த முறையிலே தேங்காய் எண்ணெயை இப்படி தடவி பாருங்க! உங்க முடியும் அடர்த்தியா கால் முட்டியை தாண்டி கண்டிப்பாக வளரும்.

mooligai-hair-oil
- Advertisement -

இப்போதெல்லாம் இளநரை, முடி கொட்டுதல் பிரச்சனை இளம் வயதினருக்கே அதிகமாக வர துவங்கி விட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தலைமுடிக்கு தேவையான போஸாக்கு கிடைக்காததே முழுமுதற் காரணமாக இருக்கிறது. இந்த போஷாக்கை கொடுக்கக் கூடிய எண்ணெய் தேங்காய் எண்ணெய்! இந்த தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை சேர்க்கும் பொழுது அது மூலிகை எண்ணெய்யாக மாறுகிறது. இது காலம் காலமாக நாம் பாட்டிமார்கள் சொல்லிக் கொடுத்த ஒரு எளிய விஷயம் தான். இதை நாமும் தெரிந்து கொள்வோமா? வாருங்கள் பதிவை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் இந்த மூலிகை எண்ணெய் சுத்தமான தேங்காய் எண்ணெயால் தயாரிக்கப்படுகிறது. முதலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவர்கள் தரமான எண்ணெயாக பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக மர செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்திப் பாருங்கள், முடி உதிர்வது இயற்கையாகவே நின்றுவிடும். இந்த தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை இரும்பு வாணலியில் ஊற்றிக் கொள்ளுங்கள். எந்த ஒரு மூலிகை எண்ணெய் தலைக்கு பயன்படுத்த தயாரித்தாலும், அதை இரும்பு சட்டியில் பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இரும்பு சட்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றியதும், அதில் முதலில் ஒரு கப் அளவிற்கு பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அடுப்பை முதலில் குறைவான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

வெங்காயம் சேர்த்ததும் அடுத்தடுத்து மற்ற பொருட்களையும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். இரண்டாவதாக ஒரு கப் அளவிற்கு சிகப்பு நிற ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப் பூக்களை சேருங்கள். செம்பருத்தி பூக்கள் சேர்த்ததும் அதே அளவிற்கு ஒரு கப் செம்பருத்தி இலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி ஒரு கப் அளவிற்கு பச்சையாக பிரஷ்ஷாக இருக்கும் கறிவேப்பிலை இலைகளையும் சேர்க்க வேண்டும். கருவேப்பிலை இலை சேர்த்ததும் மருதாணி இலைகளையும் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து எண்ணெயை நன்கு கொதிக்க விடுங்கள். எண்ணெய் முக்கால் பாகம் நன்கு கொதித்து நிறம் மாறியதும், அடுப்பை குளிர ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூலிகை எண்ணெயை வாரம் தோறும் இரண்டு முறை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். முன்பெல்லாம் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பது உண்டு.

இதையும் படிக்கலாமே:
சமையல் கட்டில் தக்காளி நறுக்கும் போது இதை செஞ்சா கூட ஹீரோயின் மாதிரி நீங்களும் பளபளன்னு இருக்கலாமே! 10 பைசா செலவில்லை ஆனால் என்றும் 16 போல முகமா?

எண்ணெய் தேய்த்து குளித்தால் மறுநாள் இது போல மூலிகை எண்ணெய்யை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தாலே வேறு எதையும் நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை. முடி கொத்துக் கொத்தாக உதிர்ந்தாலும், சட்டென நின்று அடர்த்தியாகவும், நீளமாகவும் கருகருவென்று நிறைய முடி வளர ஆரம்பிக்கும். எவ்வளவு பெரிய தலைமுடி சார்ந்த பிரச்சினைகளையும் மிக எளிதாக தீர்க்க வல்ல இந்த பாட்டி காலத்து மூலிகை தேங்காய் எண்ணெய் இன்றும் நீங்கள் பயன்படுத்தி பயனடையலாமே!

- Advertisement -