பச்சை பசேலென செடிகள் புஷ்டியாக, பெரிய பெரிய பூக்களை கொடுக்க, தினமும் கட் பண்ணும் பால் பாக்கெட்டை தூக்கி போடுவதற்கு முன்னாடி செடிகளுக்கு இப்படி செய்யுங்க!

milk-packet-rose-plant
- Advertisement -

நம் அனைவருக்குமே பாலில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது என்பது தெரியும். நம் உடம்பில் இருக்கும் எலும்பு தேய தேய நமக்கு உடலில் பலம் குறைகிறது. எலும்பு தேய்மானத்தை தடுத்து நிறுத்துவதற்கு கால்சியம் சத்து தேவை. இந்த கால்சியம் சத்து தினமும் நாம் குடிக்கும் பாலில் இருந்து நமக்கு நிறைய கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் இதர பொருட்களிலும் கால்சியம் சத்து கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். அப்படியான இந்த கால்சியம் சத்து செடிகளுக்கு கிடைக்க தூக்கி போடும் இந்த பால் பாக்கெட்டை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் தோட்ட குறிப்பாக இப்பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தாவரங்களுடைய செல் சுவர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் பொறுப்பு இந்த கால்சியத்திற்கு உண்டு. இந்த கால்சியம் குறைபாடு செடி வகைகளுக்கு ஏற்படும் பொழுது வேர் நுனி முதல் தளர்கள், இலைகள் ஆகியவற்றையும் சிதைய செய்து விடுகிறது. பச்சை பசேல் என இலைகளை துளிர்க்க செய்து, பெரிய பெரிய பூக்களை கொடுக்க கால்சியம் சத்தை நாம் உரமாக நம் செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

தினமும் நாம் காலையில் எழுந்ததும் காபி, டீ போடும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதற்கு தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு பால் பாக்கெட்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெட்டி ஊற்றுவோம். பாலை பாத்திரத்தில் ஊற்றி விட்டு கவரை சிலர் அப்படியே தூக்கிப் போட்டு விடுவார்கள். சிலர் அந்த பாக்கெட்டை கூட விட்டு வைக்காமல், சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அலசி அதையும் பாலுடன் சேர்த்து பயன்படுத்துவார்கள்.

நீங்கள் பால் பாக்கெட்டை தூக்கி போடாமல் அதில் இது போல தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொண்ட பாலின் அளவிற்க்கு நான்கு மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். அரை லிட்டர் பால் பாக்கெட்டில் இருக்கும் தண்ணீருடன் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர் கூடுதலாக ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த 2 லிட்டர் தண்ணீரை உங்களுடைய செடிகளுக்கு வேரில் வாரம் இரு முறை கொடுத்து வாருங்கள்.

- Advertisement -

பாலில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த கால்சியம் சத்து அதற்கு கிடைத்து தளிர்கள் சிதைவது, மொட்டுக்கள் உதிர்வது போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நம்முடைய செடியை பாதுகாப்பாக வைத்திருக்கும். மண்ணிற்கு கால்சியம் சத்து ரொம்பவும் அவசியமானது. இந்த கால்சியம் சத்து மண்ணிலிருந்து குறைந்தால் செடிகள் சீரான வளர்ச்சி பெறுவதில்லை.

இதையும் படிக்கலாமே:
ரோஜா, செம்பருத்தி போன்ற பூச்செடிகள் உங்க வீட்டில் இருக்கா? கொஞ்சமா பூக்கும் உங்க செடியை கொத்துக் கொத்தாக நிறைய பூக்க செய்ய பழைய சாதம் இருந்தா இப்படி செய்யுங்க!

பூஞ்சை தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்க கூடிய சத்து இந்த கால்சியம் சத்து. இப்படி பால் பாக்கெட்டில் இருந்து பயன்படுத்தப்படும் இந்த கால்சியம் சத்தால், மண் வளம் பெறுகிறது. அது மட்டும் அல்லாமல் செடிகளும் செழித்து வளர்கிறது. மேலும் செடிகளுக்கு பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கிறது. எனவே இனி உங்களுடைய வீட்டில் பால் பாக்கெட்டை தூக்கி போடாமல் இப்படி உங்கள் வீட்டு செடிகளுக்கு உரமாக கொடுத்து செடியையும் நம் எலும்பை போல பலமாக வைத்திருக்கலாமே!

- Advertisement -