ஒரே நாளில் உங்களுடைய முகத்தை வெள்ளையாக மாற்ற, இதைவிட ஈஸி டிப்ஸ் வேர இருக்கவே முடியாது. அதுவும் செலவே இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 3 பொருள் இருந்தால் போதும்.

face-tomato-cofee
- Advertisement -

பொலிவிழந்த உங்களுடைய முகத்தை டக்குனு 20 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற ஒரு ஃபேஸ் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெயிலில் அதிக நேரம் இருந்ததால் உங்களுடைய முகம் சோர்ந்து போய் இருந்தாலும், அல்லது அதிக வேலைப்பளு காரணமாக உங்களுடைய முகத்தில் சோர்வு இருந்தாலும், அல்லது நீண்ட நாட்களாக உங்களுடைய முகத்தின் மேல் அக்கறை காட்டாமல் அப்படியே முகத்தில் அடைந்திருந்தாலும், எந்த பிரச்சினை காரணமாக முகம் பொலிவிழந்து இருந்தாலும், அந்த முகத்தை உடனடியாக பளிச்சுன்னு பொலிவாக மாற்றக்கூடிய ஒரு மேஜிக் ஃபேஸ் பேக் உங்களுக்காக. இதற்காக நீங்கள் நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. எல்லார் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருள் போதும்.

ஒரு சிறிய பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், காபித்தூள் – 1 டேபிள்ஸ்பூன் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருளையும் கலந்து கொள்ள தேவையான அளவு தயிர். இன்ஸ்டன்ட் காபி பவுடர் எந்த பிராண்ட் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய முகத்தில் முகப்பரு உள்ளது என்றால் தயிர் சேர்க்காமல் தயிருக்கு பதிலாக ரோஸ்வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது பவுலில் போட்டு வைத்திருக்கும் கடலை மாவு, காபி தூள், தயிர், இந்த மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு க்ரீம் நமக்கு கிடைத்திருக்கும். உங்களுடைய முகத்தை முதலில் குளிர்ந்த தண்ணீரில் கழுவி துடைத்து விடுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்திருக்கும் இந்த கிரீமை முகத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். நன்றாக திக்காக போட்டுக் கொள்ளுங்கள்.

அப்படியே 20 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். பேக் நன்றாக முகத்தில் காய்ந்திருக்கும். அதன் பின்பு உங்களுடைய கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, முகத்தையும் தண்ணீர் தொட்டு நினைத்துக் கொண்டு, இரண்டு நிமிடம் போல லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

ஃபேஸ் பேக் போடுவதற்கு முன்பு, உங்கள் முகம் இருந்த நிறத்திற்கும் இப்போது உங்கள் முகம் இருக்கும் நிறத்திற்கும் நிச்சயமாக நல்ல வித்தியாசம் தெரியும். உடனடியாக ரெடி ஆகி வெளியே செல்ல வேண்டுமென்றால் இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. வாரத்தில் 2 நாட்கள் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் பொலிவு கூடும். முகத்தில் இருக்கக்கூடிய கருமை நிறம் படிப்படியாக வெள்ளை நிறத்திற்கு மாற தொடங்கும்.

13 வயதிற்கும் மேல் உள்ள ஆண் பெண் யார் வேண்டும் என்றாலும் இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பார்க்கலாம். சீக்கிரத்தில் வெள்ளையாக தினமும் இந்த பேக்கை போடக்கூடாது. வாரத்தில் இரண்டு நாள் பயன்படுத்தினால் மட்டுமே போதுமானது. மிஸ் பண்ணாதீங்க ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா பெஸ்ட் ரிசல்ட் உங்களுக்கு கண்ணாடி முன்பு தெரியும்.

- Advertisement -