ரேஷன் பச்சரிசியில் கொஞ்சம் கூட புழுங்கல் அரிசியே சேர்க்காமல், சாப்டான இட்லி செய்யலாம் தெரியுமா?. வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்!

- Advertisement -

இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி எடுத்து விடலாம். இந்த இட்லியை பொருத்த வரையில் அளவுகள் சரியான முறையில் சேர்த்து மாவை சரியான பக்குவத்தில் அரைத்தால் தான் நல்ல சாப்டான, பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் நல்ல சாப்டான பஞ்சு போன்ற இட்லியை ரேஷன் பச்சரிசியில் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

இட்லி ஊற்றும் போது பச்சரிசியை அதிகமாக சேர்த்தால் இட்லியே ஊற்ற வராது என்று தான் நாம் இதுவரை நினைத்து இருந்தோம். ஆனால் வெறும் பச்சரிசியை மட்டும் வைத்து நல்ல சாப்டான இட்லி ஊற்ற முடியும் என்பதை தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

செய்முறை

இதற்கு முதலில் இரண்டு டம்ளர் பச்சரிசி எடுத்து சுத்தம் செய்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு, கொஞ்சமாக கல் உப்பை சேர்த்து அதன் பிறகும் இரண்டு முறை சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். அப்போது தான் அரிசியின் மேல் இருக்கும் அந்த பழுப்பு நிறமும், ரேஷன் அரிசியின் வாடையும் சுத்தமாக நீங்கும். அதன் பிறகு அரிசியில் தண்ணீர் ஊற்றி இதை நான்கு மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

உளுந்தையும் இரண்டு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் உளுந்து வீதம் அளந்து எடுத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு, நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை இரண்டும் நன்றாக ஊறிய பிறகு முதலில் உ ளுந்தை கிரைண்டரில் சேர்த்து உளுந்து ஊற வைத்து தண்ணீரையே தெளித்து, தெளித்து அரைக்க வேண்டும். இந்த மாவை 15 நிமிடம் வரை அறைந்தால் போதும் உளுந்து நன்றாக உப்பி பந்து போல வந்து விடும். அதன் பிறகு உளுந்தை எடுத்து விட்டு அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு கிரைண்டரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி கொஞ்சம் நறநறவென்று இருக்கும் படி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகக் உப்பு சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். இது அப்படியே எட்டு மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து மறுபடியும் ஒரு முறை மாவை நன்றாக கலந்து இட்லி ஊற்றி எடுத்தால் நல்ல சாஃப்ட்டான இட்லி தயார்.

- Advertisement -

எப்பொழுதுமே மாவை அரைத்து உப்பு போட்டு கரைத்த பிறகு தனித் தனி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இட்லி ஊற்ற ஒரு முறை பிரஜிலிருந்து மாவை எடுத்து கலந்து ஊற்றி விட்டால், மறுபடியும் அதில் இட்லி ஊற்றும் போது அதே சாப்ட்னஸ் கிடைக்காது. இதே தனித் தனி பாத்திரத்தில் ஊற்றி விட்டால் முதலில் எடுத்த மாவை இட்லி ஊற்றிய பிறகு, அடுத்த பாத்திரத்தில் இருந்து மாவை எடுத்து கலந்து ஊற்றினால் அதே பக்குவத்தில் இட்லி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: காரசாரமாக நாவிற்கு சுவை தரும் காரச் சட்னியை சுலபமாக இப்படியும் செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சட்டுனு ஒரு சட்னி ரெசிபி.

அரிசி, உளுந்து இரண்டின் அளவையும் சரியாக சேர்த்து அரைத்து, உளுந்து ஊற வைத்த தண்ணீரில் மாவை அரைத்து அரிசி, உளுந்து இரண்டையும் நன்றாக கலந்த பிறகு எட்டு மணி நேரம் கழித்து ஊற்றினால் நல்ல மிருதுவான இட்லி கிடைக்கும். நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் இது போல முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக நல்ல சாப்ட் இட்லி கிடைக்கும்.

- Advertisement -