பழைய செப்புப் பாத்திரங்கள் புதுசு போல பளிச்சிட சூப்பர் டிப்ஸ்.

copper vessels cleanin tips
- Advertisement -

முன்பெல்லாம் இந்த செப்பு பாத்திரங்கள் பெருமளவு பயன்பாட்டில் இருந்து வந்தது. கால சூழ்நிலை இவைகளின் பயன்பாடும் பெரும் அளவு குறைந்து விட்டது. இதற்கு காரணம் அதன் விலை ஒரு புறம் இருந்தாலும் அதை பராமரிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதால் தான். செப்பு பாத்திரத்தை ஒரு முறை பயன்படுத்தி விட்டால் மறுமுறை சுத்தப்படுத்திய பிறகு தான் அதை பயன் படுத்த முடியும்.

ஏனெனில் அதன் மேல் கறை படிந்து அழுக்காகி பழையது போல இருக்கும். இன்றைய அவசர காலத்தில் இதையெல்லாம் தினமும் செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆகையால் அது உடலுக்கு நன்மை தரும் என தெரிந்தும் யாரும் இதை பயன்படுத்துவதில்லை. இந்த வீட்டு குறிப்பு பதிவில் செப்பு பாத்திரங்களை சுலபமாக சுத்தம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செப்புப் பாத்திரங்களை சுலபத்தில் பளிச் சென்று மாற்ற:
இந்த முறையில் பாத்திரத்தை சுத்தப்படுத்த கொஞ்சமாக தூள் உப்பை எடுத்து கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து தொட்டு எடுத்து பாத்திரம் முழுவதும் அப்படியே தேய்த்து விடுங்கள். அதன் பிறகு நாம் பயன்படுத்தும் எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் அதை சிறிதளவு எடுத்து இதன் மேல் தேய்த்து சுத்தப்படுத்தினால் பளிச்சென்று மாறி விடும்.

இதே போல கொஞ்சம் புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள். அதில் தூளுப்பை சேர்த்து பேஸ்ட் போல குழைத்து கொள்ளுங்கள். அதை பாத்திரத்தின் மீது தேய்த்த பிறகு ஸ்க்ஃப்பர் வைத்து லேசாக தேய்த்தாலே பாத்திரத்தின் மேல் படிந்த கறைகள் எல்லாம் நீங்கி விடும்.

- Advertisement -

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது தான். இதற்கு நாம் வீட்டில் பயன்படுத்தும் ஹார்பிகை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை இந்த பாத்திரத்தின் மேல் தேய்த்துப் பாருங்கள். நீங்கள் லேசாக தேய்க்கும் பொழுதே பாத்திரம் புதுசு போல பளிச்சென்று மாற ஆரம்பிக்கும்.

ஹார்பிகை வைத்து எப்படி சுத்தப்படுத்துவது? இதில் அதிக அளவு கெமிக்கல் இருக்குமே என யோசிக்கலாம். இதை வைத்து சுத்தம் செய்த பிறகு நீங்கள் எப்போதும் போல கொஞ்சமாக புளியோ அல்லது இட்லி மாவு போன்றவற்றை வைத்து தேய்த்து அதன் பிறகு பயன்படுத்துங்கள். பாத்திரம் அவ்வளவு பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்கள் தகதகன்னு மின்ன ஒரு துண்டு மாங்காய் இருந்தா போதும்.

செப்பு பாத்திரங்களை பொறுத்த வரையில் அதை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் எந்த லிக்விட் சோப்பு போட்டு தேய்க்க கூடாது. மேலே உள்ள குறிப்புகளில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறது என்று தோன்றுகிறதோ அதை பயன்படுத்தி செப்பு பாத்திரங்களை எப்போதும் புதிது போல பராமரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -