முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி ஃபேஸ் பேக்

coriander face
- Advertisement -

முகம் நல்ல நிறமாகவும் பொலிவாகவும் பார்க்க வசீகர தோற்றத்துடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. அதனுடைய தாக்கம் தான் இன்று பெருகி இருக்கும் அழகு நிலையங்களும் அதிகப்படியாக விற்பனையாகும் கெமிக்கல் கலந்து கிரீம்களும். இதன் மூலம் அழகை எப்பொழுதும் நிரந்தரமாக அதிகரிக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். அது மட்டும் இன்றி இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம்.

ஆகையால் பணத்தை செலவழித்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாமல் நம் வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே நம்முடைய அழகை அதிகரிப்பதுடன் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். அதில் ஒரு அருமையான குறிப்பை பற்றி தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த ஃபேஸ் பேக் உங்களை எப்பொழுதும் நல்ல பொலிவுடன் வசீகரமான தோற்றத்துடனும் வைத்திருக்கும் அது என்ன என்பது பார்க்கலாம்.

- Advertisement -

முகத்தை பொலிவாக வைத்திருக்க கொத்தமல்லி ஃபேஸ் பேக்

இதுவரை இந்த கொத்தமல்லியை நாம் சமையலுக்குத் தான் பயன்படுத்தி இருப்போம். கொத்தமல்லையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. அதே கொத்தமல்லியை வைத்து ஒரு அருமையான ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தும் போது நம்முடைய சருமத்திற்கும் நல்ல பலனை தருவதாக உள்ளது.

இதற்கு ஒரு கைப்பிடி நிறைய கொத்தமல்லியை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் எவ்வளவு மைய அரைக்க முடியுமோ அந்த அளவுக்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை நன்றாக வடிகட்டி இதன் சாறை மட்டும் தனியாகஎடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கற்றாழை ஜெல் இது இரண்டையும் கலந்து சிறிது நேரம் கைவிடாமல் அடித்தால் நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு கொஞ்சமாக ரோஸ் வாட்டரையும் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை லேசாக மசாஜ் செய்து சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தும் பொழுது முகம் நல்ல பொலிவாக மாறுவதுடன் வசீகரமாகவும் பார்க்க அழகாகவும் தெரிவீர்கள்.

சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் போல் இருக்கும். அப்படியானவர்கள் இந்த கொத்தமல்லி சாறுடன் தயிரையும் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து இது போல கலந்து பேக் போட்டு வரும் போது சருமம் ஒரே சீரான நிறத்துடன் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: முகச்சுருக்கம் நீங்க ஆன்ட்டி ஏஜிங் கிரீம்

இயற்கையான முறையில் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக் முகத்தின் அழகை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி அதை நிரந்தரமாக தக்க வைப்பதுடன் பக்க விளைவு இல்லாதது என்பது தான் முக்கியமான ஒன்று. இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -