எல்லோரும் குப்பையில் தூக்கிப் போடும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படி ஒரு கில்லாடி ஐடியாவா? நம்ம மூளைக்கு இத்தனை நாளா இது எட்டாமல் போச்சே!

kothamalli-podi
- Advertisement -

நாம எல்லோருமே கொத்தமல்லி தழையை வாங்கி அதன் வேர் பகுதியை நறுக்கி குப்பையில் தான் தூக்கி போடுவோம். சில பேர் அந்த தண்டு பகுதிகளை கூட தூக்கி குப்பையில் போட்டு விடுவார்கள். அதை ரசத்திற்கு பயன்படுத்தினால் நன்றாகத் தான் இருக்கும். நீங்கள் கொஞ்சம் தண்டு பகுதியோடு வேர்ப்பகுதியையும் சேர்த்து நறுக்கி குப்பையில் போடுவதற்கு முன்பு இந்த பதிவை படிங்க. நிச்சயமா உங்க கையால் அந்த வேர் பகுதியை குப்பையில் தூக்கிப் போட மனசு வராது. இந்த பதிவில் இப்படி ஒரு அழகான குறிப்பை படித்த பிறகு.

செய்முறை

முதலில் வெட்டி வைத்திருக்கும் இந்த வேர் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். ரொம்பவும் தடிமனாக இருக்கும் வேர் பகுதியாக இருந்தால் அதன் மேலே இருக்கும் மண்ணை கத்தியால் சீவி எடுத்து விடுங்கள். பிறகு இதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி விட்டு ஒரு வடிகட்டியில் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு ஒரு வெள்ளை துணியில் பரப்பி வெயிலில் காய வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது வீட்டிற்கு உள்ளேயே நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் காய வைத்துக் கொண்டாலும் சரி. தண்ணீர் இல்லாமல் ட்ரை யாக உங்களுக்கு அந்த வேர் பகுதி கிடைத்திருக்க வேண்டும். (இந்த வேர் பகுதியுடன் சேர்த்து கூட அந்த தண்டு பகுதிகளையும் ரெசிபிக்கு பயன்படுத்தலாம்.) இப்போது இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

கொத்தமல்லி வேர் தண்டுகளை நறுக்கி வெயிலில் காய வைத்து எடுத்தால் ரொம்பவும் குறைந்த அளவு தான் நமக்கு கிடைத்திருக்கும். அழுத்தி எடுத்தால் ஒரு கைப்பிடி கூட தேறாது அல்லவா. அந்த ஒரு கைப்பிடி அளவு காய்ந்த கொத்தமல்லி தண்டிற்கு, பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் காய்ந்த இந்த கொத்தமல்லி தண்டுகளை டிரையாகவே வறுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் கடலைப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகு 10, சீரகம் 1/2 ஸ்பூன், எள்ளு 1 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் 4, உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு நன்றாக டிரையாக வறுத்து, இதையும் வறுத்து வைத்திருக்கும் கொத்தமல்லி தண்டுகளோடு சேர்த்து தேவையான அளவு உப்பு, போட்டு மிக்ஸி ஜாரில் நைசாக பொடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு கண்டெய்னரில் ஸ்டோர் செய்தால் ஒரு மாதம் கெட்டுப் போகாது. சுடச்சுட சாதத்தில் இந்த பொடியை சேர்த்து நெய் விட்டு பிசைந்து சாப்பிடுங்கள். ருசி உங்களுக்கு தெரியும். இதே பொடியில் நெய் விட்டு கலக்கி அல்லது நல்எண்ணெய் விட்டு கலந்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் அருமையான ருசி இருக்கும். இந்த பொடியில் கொத்தமல்லியின் வாடை ரொம்பவும் ஸ்ட்ராங்காக வீசும். ரசம் சாம்பார் வைக்கும் போது கொத்தமல்லி தழை இல்லை என்றால் இந்த பொடியை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் ஒன்றும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: குக்கரில் மூனே விசில் விட்டால் போதும் அட்டகாசமான உருளைக்கிழங்கு குருமா ரெடி. இதுக்கு முன்னாடி கறிக் குருமாவே தோத்து போயிடும். சப்பாத்தி பூரி இட்லி தோசை எத செஞ்சாலும் இந்த குருமா வச்சு அசத்துங்க.

உங்களால் இந்த கொத்தமல்லி தழை தண்டுகளை, வேரை வெயிலில் காய வைக்க முடியவில்லை என்றால் வீட்டிலேயே ஃபேன் காற்றில் இரண்டு நாட்கள் நன்றாக உலர வைத்தும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. என்ஜாய் பண்ணுங்க.

- Advertisement -