10 நிமிடத்தில் உங்களை வெள்ளையாக மாற்றப்போகும், வெள்ளை நிற மேஜிக் பவுடர்! இந்தப் பவுடர் உங்க வீட்ல இருக்கா?

face6
- Advertisement -

நாம இருக்கிற நிறத்தை விட, ஒரு படி மேல வெள்ளையாக மாறுவதற்கு வெறும் 10 நிமிடம் போதும். உங்களது முகத்தை வெள்ளையாக மாற்ற சுலபமான முறையில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பேஸ்ட்டை முகம் மட்டுமல்லாமல் உங்களது கை கால், உடலில் எல்லா பகுதிகளிலும் கூட தடவிக் கொள்ளலாம். நிஜமாவே பத்து நிமிஷத்துல நீங்க அழகா மாறிடுவீங்க! இந்த மேஜிக் பவுடரை பற்றி நீங்க தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறீர்களா. வாங்க இப்பவே தெரிஞ்சுக்கலாம்.

cornflower

முதலில் இந்த பேக்கை தயார் செய்ய நமக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை தெரிந்துகொள்வோம். கான்பிளவர் மாவு – 1 டேபிள்ஸ்பூன், காய்ச்சாத பால் – 1/2 டம்ளர் அளவு, காபி பவுடர் 1/2 ஸ்பூன். வெள்ளரிக்காயை வாங்கி மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் கான்பிளவர் மாவுடன், பாலை ஊற்றி கட்டி படாமல் நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கான்பிளவர் மாவு ஊற்றி, விட்டு அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைக்க வேண்டும். (அடுப்பை பற்ற வைத்து விட்டு கடாயை சூடு படுத்தி விட்டு கான்பிளவர் மாவை ஊற்றினால் உடனே கட்டி பிடித்து விடும் அப்படி செய்யக்கூடாது.)

milk1

அடுப்பை சிம்மில் வைத்து, பின்பு ஒரு கரண்டியை வைத்து கான்பிளவர் மாவும், பாலும் சேர்ந்த கலவையை கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கட்டி படாமல் இது அல்வா பதத்திற்கு வரவேண்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பாலை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இதோடு 1/4 ஸ்பூன் காபி பவுடரையும் போட்டு நன்றாக கலந்து அல்வா பதத்தில் இருக்கும் இந்த க்ரீமை எடுத்து தனி பவுலில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். வெறும் இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்குள் இந்த பேஸ்ட் தயாராகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. (இப்போது இதை அப்படியே நம்மால் முகத்தில் அப்ளை செய்ய முடியாது. பிசுபிசுவென கொஞ்சம் கெட்டிப் பதத்தில் தான் இருக்கும்.)

- Advertisement -

பவுலில் எடுத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவு பால் காபி பவுடர் சேர்ந்த இந்த பேஸ்டுடன், 2 டேபிள் ஸ்பூன் அளவு வெள்ளரி விழுதை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது தள தளவென ஒரு ஃபேஸ் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளலாம். கை பகுதிகளில் கீழிருந்து மேல் பக்கமாக தடவவேண்டும் முட்டிப் பகுதிகளில் கொஞ்சம் நிறையவே இந்த பேஸ்டை அப்ளை செய்து அப்படியே 10 நிமிடம் விட்டுவிட வேண்டும்.

face7

இதில் நாம் கலந்திருக்கும் கான்பிளவர் மாவு உங்களது முகத்தை அப்படியே இறுக்கி பிடிக்க ஆரம்பிக்கும். பத்து நிமிடங்கள் மட்டுமே இந்த பேக் உங்களது சருமத்தில் இருக்க வேண்டும். அதன் பின்பு லேசாக கையில் தண்ணீரை நனைத்து உங்களது முகத்தில் வைத்து மசாஜ் செய்து கழுவி விடுங்கள். உங்களுடைய நிறம் முன்பு இருந்ததற்கும் இந்த பேக்கை போட்ட பின்பு இருக்கக்கூடிய நிறுத்திற்க்கும் நிச்சயமாக உடனடி வித்தியாசத்தை உங்களால் காண முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -