அடிச்சித்தூக்கு என்று தல அஜித் பாடலுடன் துவங்கும் மிட்டா தல தோனியின் அமர்க்களமான சி.எஸ்.கே அணியின் புதிய பாடல் – வைரல் வீடியோ

Csk

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

CSK

இந்நிலையில் இன்று சென்னை அணிக்காக புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் ஹிட் அடிட்க்க துவங்கி உள்ளது. இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். தல அஜித் சமீபத்தில் நடித்த அடிச்சி தூக்கு என்ற வரியை துவக்கமாக கொண்டு இந்த பாடல் துவங்குகிறது.

மேலும், இந்த பாடலில் தல தோனி குறித்தும், சென்னை அணியின் பலம் குறித்தும் வரிகள் உள்ளன. உங்களுக்காக இதோ அந்த பாடலின் இணைப்பு :

எத்தனை வருடங்கள் ஆனாலும் சென்னை அணிக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணி போன்று மதிப்புடன் எந்த அணியும் இவ்வளவு காலமாக இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கடந்த இரண்டு ஆண்களில் உலகின் வேறு எந்த பந்துவீச்சாளரும் படைக்காத விசித்திரமான சாதனை படைத்த இங்கி வீரர் – பென் ஸ்டோக்ஸ்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்