Maravalli kizhangu vadai : மரவள்ளி கிழங்கை வைத்து இப்படி ஒரு முறை வடை செய்து பாருங்கள். அருமையாக இருக்கும்.

kizhanku vadai
- Advertisement -

ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளில் வடைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இன்று வரை காலையிலும், மாலையிலும் டீயுடன் வடையை சேர்த்து சாப்பிட்டு தங்கள் உணவை முடித்துக் கொள்ளும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். வடைக்கு அடிமையாக இருப்பவர்கள் பலரும் இருக்கின்றன. சுப நிகழ்ச்சிகள் என்று வரும் பொழுது உணவில் கண்டிப்பான முறையில் வடை என்பது இருக்கும். நம்முடைய பாரம்பரியத்தோடு சேர்ந்து வரும் இந்த வடையை இன்னும் மிகவும் சத்து மிகுந்த வடையாக மாற்றுவதற்கு மரவள்ளி கிழங்கை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

மரவள்ளி கிழங்கில் பல சத்துக்கள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கை முறையாக நாம் உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும். ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ரத்த சோகையை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் புரதச்சத்தும், விட்டமின் கே யும் எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. அதிகமான அளவு நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாக கூடிய தன்மை உடையதாகவும் திகழ்கிறது.

- Advertisement -

செய்முறை

முதலில் 1/4 கிலோ உளுந்தை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 2 கிலோ மரவள்ளி கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு கேரட் உரசுவது போல் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஊறவைத்த உளுந்தை கிரைண்டரில் போட்டு வடை மாவு பதத்தை விட கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அரைத்த பிறகு நாம் துருவி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கையும் அதில் சேர்த்து நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

மரவள்ளி கிழங்கிலிருந்து தண்ணீர் வரும் என்பதால் நாம் தனியாக மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உளுந்தும், மரவள்ளிக் கிழங்கும் நன்றாக அரைந்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோம்பை போட்டு ஒரு நிமிடம் ஆட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இதனுடன் 5 ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகை ஒன்று இரண்டாக தட்டி அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடியும், கருவேப்பிலை சிறிதும் சேர்த்து நன்றாக அடித்து பிணைந்து கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து நன்றாக சூடானதும் வடை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு உளுந்த வடை தட்டுவது போல் தட்டி எண்ணெயில் போட வேண்டும்.

- Advertisement -

ஒருபுறம் நன்றாக சிவந்து வந்த பிறகு அதை திருப்பி போட்டு மற்றொருபுறமும் வேக விட வேண்டும். இருப்புறமும் நன்றாக சிவந்த பிறகு அதை எடுத்து எண்ணெயை வடிகட்டி கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான மரவள்ளி கிழங்கு வடை தயார் ஆகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பச்சை பயிரில் ஒரு முறை இப்படி கிரேவி செஞ்சு பாருங்க. சூப்பரான சைட் டிஷ்ஷா இருக்கும்.

பல ஆரோக்கிய நன்மைகளை பெற்றிருக்கும் மரவள்ளி கிழங்கை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -