டேமேஜ் ஆன முடியை, டேமேஜ் ஆன பொருளை வைத்தே சரி செய்யலாம் வாங்க. கனவிலும் நினைத்து பார்க்காத முடி வளர்ச்சிக்கு ‘பெஸ்ட் டேமேஜ் ரிப்பேரிங் பேக்’.

hair11
- Advertisement -

டேமேஜ் ஆன உங்க முடியை சூப்பரா சரி செய்யணும். துண்டு துண்டா முடி இருக்கும் அதெல்லாம், நீளமாக வளர வைக்கணும். முடி சீராக இருக்க வேண்டும். அடர்த்தியாக இருக்க வேண்டும். கொட்டாமல் இருக்க வேண்டும். ஷைனிங்காக இருக்க வேண்டும். இவ்வளவு நன்மைக்கும் நம் வீட்டில் டேமேஜ் ஆகி இருக்கக்கூடிய பொருளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ரொம்பவும் தோல் கருத்த பழுத்துப்போன வாழைப்பழத்தை குப்பையில் தூக்கி போடுவிங்க. ரொம்பவும் புளித்த தயிரை கீழே கொட்டிடுவீங்க. இது இரண்டுமே டேமேஜ் தான். இந்த இரண்டு பொருளை இனி வீணாக்காதீர்கள்.

நன்றாக பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து ஒரு காட்டன் துணியில் ஊற்றி திப்பி இல்லாமல் பேஸ்ட் போல வாழைப்பழ விழுதை வடிகட்டி எடுத்துக்கோங்க. இந்த அரைத்த வாழைப்பழ விழுதோடு 2 டேபிள் ஸ்பூன் புளித்த தயிரை ஊற்றி, நன்றாக கலந்தால் சூப்பரான மொழு மொழு பேக் கிடைத்திருக்கும். இதில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் உங்கள் விருப்பம் போல எண்ணெயை விட வேண்டும். இதோடு விட்டமின் E கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல் 1 சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பேக்கை நன்றாக கலந்து உங்களுடைய தலை முடியில் வேர்க்கால்களில் முதலில் நன்றாக அப்ளை செய்து விடுங்கள். அதன் பின்பு நுனி மூடி வரை இதை தடவ மறக்காதீங்க. அப்போதுதான் முடியில் இருக்கக்கூடிய வெடிப்பு மற்ற டேமேஜ்களும் சரியாகும். வெறும் 20 நிமிடம் இந்த பேக்கை போட்டு தலை முடியில் ஊறவிட்டு அதன் பின்பு மைல்டான ஷாம்பு போட்டு தலையை கசக்கி அலசி விடுங்கள். அவ்வளவு தான். சூப்பராக உங்களுடைய முடி சில்க்கியாக மாறி இருக்கும்.

எப்போதெல்லாம் பழுத்த வாழைப்பழம் இருக்குதோ, எப்போதெல்லாம் தயிர் இருக்கிறதோ, இந்த பேக் ட்ரை பண்ணலாம். அப்படி இல்லையென்றால் வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டா கூட போதும். உங்களுடைய முடியில் இருக்கும் டேமேஜ் சரியாகும். முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக பவுன்சியாக வளர தொடங்கும்.

- Advertisement -

பழுத்த வாழைப்பழம், புளித்த தயிர், விட்டமின் ஈ கேப்ஸ்யூல், தேங்காய் எண்ணெய் இந்த 4 பொருட்கள் நான்கு மடங்கு முடி வளர்ச்சியே கொடுக்கும் அளவிற்கு சத்து உடையது முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் சிரமம் இல்லாமல் பளபளக்க இந்த 1 பூஜை பொருளே போதுமே!

எப்போதும் போல சொல்வது தான். வெறும் பேக்கை மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடி வளரவில்லை என்று சொல்லக்கூடாது. பேக்கை முயற்சி செய்து பார்க்கும் போது கூடவே ஆரோக்கியமான உணவுப் பொருட்களையும் நாம் சாப்பிட்டு வர வேண்டும். உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் கிடைத்தால் தான், முடிவுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

- Advertisement -