உங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு

money

ஜோதிடத்தில் நவ கிரகங்களும் ஒரு ஜாதகர் பிறக்கின்ற போது, அவரது ஜாதகத்தின் படி கிரகங்கள் இருந்த நிலைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும். அந்தப் பலன்கள் கிரகங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும். இந்த நவ கிரகங்களில் சுப கிரகங்கள் எனக் கூறப்படுவது குரு மற்றும் சுக்கிரன் கிரகங்கள் மட்டுமே ஆகும். தேவ குரு எனப்படும் குரு கிரகமும், அசுர குரு எனப்படும் சுக்கிர கிரகமும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்திருந்தால் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

guru

ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவானும், சுக்கிரனும் சேர்ந்து ஜாதக கட்டங்களில் தனஸ்தானங்கள் எனக் கூறப்படுகின்ற லக்னத்துக்கு 2, 4, 6, 10 ஆம் வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு விபரீத தனப்பிராப்தி யோகத்தை உண்டாக்குகிறது. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் யோகங்களில் இந்த விபரீத தனப்பிராப்தி யோகமும் சிறப்பான ஒரு யோகமாக கருதப்படுகிறது.

இந்த விபரீத தனப்பிராப்தி யோகத்தை தங்களின் ஜாதகத்தில் அமையப் பெற்ற ஜாதகர்கள் குரு தசை மற்றும் சுக்கிர தசை நடைபெறும் காலங்களில் அவர்கள் எதிர்பாராத வகையில் ஏராளமான பணவரவுகளை பெறுவார்கள். வேண்டாம் என்று ஒதுங்கி போனாலும் இவர்களைத் தேடி செல்வம் வரும். இந்த யோகம் ஏற்பட்ட காலத்தில் ஜாதகர் தன்னுடைய செயல் வெற்றி பெறக் கூடாது என்று நினைத்து செயல்பட்டாலும், அக்காரியம் சிறப்பான வெற்றியை அடைந்து, மிகுந்த லாபங்களை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.

sukran

ஜாதகருக்கு சூதாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற போட்டிகளில் ஈடுபடும் பழக்கம் இருந்து, அதில் ஈடுபடும் போது எதிர்பாரா அதிர்ஷ்டங்களை பெற்று மிகுந்த பணவரவை பெறுவார்கள். சாதாரண வீட்டிலிருந்து வசதி மிக்க வீட்டிற்கு குடிபோகும் யோகம் ஏற்படும். ஆடம்பரமான வாகன வசதி உண்டாகும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கும் அதிர்ஷ்டமும் ஏற்படும். பொன் ஆபரணங்கள் சேர்க்கையும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வாழ்க்கை துணையால் தனவரவு உண்டாக செய்யும் யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dhanprapti yogam in Tamil. It is also called as Jothida yogangal in Tamil or Jathaga yogam in Tamil or Guru sukran serkai in Tamil or Selvam tharum yogangal in Tamil.