உங்களுக்கு வாழ்க்கை துணையால் தனவரவு உண்டாக இவை அவசியம் தெரியுமா?

jothidam

நமது கர்ம வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய பலன்களைக் கூறுவதே ஜாதகமாகும். ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கின்ற கிரகங்களுக்கு உண்டாகும் பலன்கள் போல அந்த கிரகங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கின்ற இடங்களைக் கொண்டும் பலன்கள் மாறுபடுகின்றது. அந்த வகையில் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களான 4 மற்றும் 7 ம் இடங்களில் கிரகங்கள் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

ஒருவரின் ஜாதகத்தை கணித்து பலன் கூறும் போது அதில் கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் லக்னத்திற்கு 4-ம் இடம் மற்றும் 7-ம் இடத்தை கணக்கிடுவது முக்கியமானதாகும். நான்காம் இடம் என்பது ஒரு ஜாதகனுக்கு அமையக்கூடிய வாகனம் மற்றும் சுகபோகங்களை பற்றிக் கூறுகின்ற இடம். அதே போன்று 7-ஆம் இடம் என்பது ஒரு ஜாதகருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையைப் பற்றி கூறும் இடமாக இருக்கிறது. இவ்விடங்களில் சுபகிரகங்கள் இருப்பது மிகவும் விசேஷமானதாகும்.

பொதுவாக ஒரு நபரின் ஜாதகத்தில் கேந்திர இடங்களான நான்கு அல்லது ஏழாம் இடத்தில் சுப கிரகங்கள் தனித்தோ அல்லது மற்ற சுபகிரகங்களுடனோ சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் பெருமளவில் செல்வம் ஈட்டும் திறம் பெற்றவராக இருப்பார். மிக பெரும் கோடிஸ்வரர் ஆகும் யோகம் இத்தகைய ஜாதகருக்கு உண்டாகும். மிகப்பெரும். அனைத்து வகையான தொழில், வியாபாரங்களில் வெற்றிகள் குவியும். சுவை மிகுந்த உணவுகளை உட்கொள்வார்கள். வசதியான வீடு மற்றும் ஆடம்பரமான விலை உயர்ந்த வாகனங்கள் பலவற்றை பெற்று வாழ்க்கையை இன்பமாக வாழ்வார்கள்.

money

மேலும் இத்தகைய ஜாதகருக்கு காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். பெண்களால் தன லாபங்கள் உண்டாகும். அழகிய, மனதிற்கினிய வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். வாழ்க்கை துணை வழியாக மிகுதியான செல்வங்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஒரு சிலர் அதிர்ஷ்டம் மிக்க வாழ்க்கை துணை அமைய பெற்று, மென்மேலும் செல்வங்களையும், ஆடம்பர பொருட்களின் சேர்க்கையையும் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
மிதுன லக்னத்தார்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை பெற இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kendra palan in Tamil. It is also called as Suba grahangal in Tamil or Subha grahas in Tamil or Jathaga palangal in Tamil or Kendra veedugal in Tamil.