நோயற்ற வாழ்வை தரும் தன்வந்திரி ஜெயந்தி.

thanvanthiri valipadu
- Advertisement -

நோய்கள் ஏதும் இல்லாமல் நலமான வாழ்க்கையை வாழ்வதுதான் உயர்ந்த செல்வமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த செல்வத்தை தரும் அற்புத கடவுளாக தன்வந்திரி பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட தன்வந்திரி பகவானுக்குரிய நாளாக நாளை நவம்பர் 10, 2023 தன்வந்திரி ஜெயந்தி திகழ்கிறது. இந்த நாளில் தன்வந்திரி பகவானை எப்படி வழிபட வேண்டும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அந்த அவதாரங்களில் ஒன்றாக விளங்குவது தான் தன்வந்திரி அவதாரம். திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து பல அற்புதமான பொருட்கள் வெளிப்பட்டது. அவற்றுள் ஒருவர்தான் தன்வந்திரி பகவான். தன்வந்திரி பகவானின் கையில் அமுத கலசம் இருக்கும். இந்த அமுத கலசத்தை பருகியதால் தான் தேவர்கள் அழியா வரத்தைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

- Advertisement -

மேலும் மகாவிஷ்ணு எடுத்த அனைத்து அவதாரங்களிலும் கடைசியில் அவர் வைகுண்டம் செல்வதாக இருக்கும். ஆனால் இந்த தன்வந்திரி அவதாரத்தில் மட்டும் உலக மக்களின் நன்மைக்காக அவர்களை நோயிலிருந்து பாதுகாக்க இந்த உலகத்திலேயே தங்கிவிட்டார் என்ற கூற்றும் நிலவி வருகிறது. இவரே நோய்களை நீக்குவதற்கும், மருத்துவத்திற்கும் அதிபதியாக விளங்குகிறார். இப்படிப்பட்ட தன்வந்திரியை நாம் தன்வந்திரி ஜெயந்தி அன்று வழிபட்டால் நமக்கு நோயற்ற வாழ்க்கை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய தன்வந்திரி ஜெயந்தி என்பது தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வரும் தூவாதசி அன்று வரும். இந்த ஆண்டு நாளை தன்வந்திரி ஜெயந்தி வருகிறது. இந்த தன்வந்திரி ஜெயந்தி நாள் அன்று அவரை நினைத்து ஒரு அகலில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு சங்கை எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி சிறிது துளசி இலைகளை போட்டு அதன் மேல் நம் கையை வைத்துக் கொண்டு தன்வந்திரி பகவானுக்குரிய மூல மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

மூல மந்திரம் தெரியாதவர்கள் “ஓம் தன்வந்திரி பகவானே நமஹ” என்ற மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அந்த சங்கில் இருக்கும் தீர்த்தத்தை நாமும் அருந்தி வீட்டில் இருப்பவர்களுக்கும் அருந்த தரவேண்டும். மேலும் அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதன் மூலமும் தன்வந்திரி பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சங்கு இல்லாதவர்கள் பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் நீரை ஊற்றி துளசியிலையை போட்டு இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை நீக்க உதவும் தும்பை பூ.

ஆயுர்வேதத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய தன்வந்திரி பெருமாளை இந்த முறையில் தினமும் வழிப்பட்டு வர நோயற்ற நலமான வாழ்வு கிடைக்கும்.

- Advertisement -