உங்களிடம் தெய்வ சக்தி உண்டு என்பதை நிரூபிக்கக்கூடிய 2 விஷயங்கள் என்னென்ன? நீங்களும் தெய்வ சக்தி உடையவரா என்று தெரிஞ்சுக்கணுமா?

mahalakshmi-planting
- Advertisement -

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்தி இரண்டுமே இருக்கும். அது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுவது உண்டு. எல்லா சமயங்களிலும் எல்லோராலும் நல்லவராக இருந்து விட முடியாது. உங்களுடைய சூழ்நிலை தான் உங்களை அந்நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும்? என்பதை நிர்ணயிக்கிறது. ஆனால் இவற்றைக் கடந்து ஒரு சிலரிடம் தெய்வ சக்தி அதிகமாக இருக்கும். இப்படி தெய்வ சக்தி நிறைந்தவர்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும்? நீங்கள் தெய்வ சக்தி உடையவரா? என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறீர்கள்.

தெய்வ சக்தி உடையவர்கள் எப்பொழுதும் தன்னை தானே பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. நான் இப்படி! நான் அப்படி! தெரியுமா? என்றெல்லாம் தற்புகழ்ச்சி கொள்வதில்லை. இளமையான தோற்றத்துடனும் நல்ல முகம் அம்சம் கொண்ட தெய்வீக கலையும் இயல்பாகவே அவர்களுடைய முகத்தில் தென்படும்.

- Advertisement -

நீங்கள் உங்கள் வீட்டில் செடி, கொடி அல்லது மரத்தை நட்டு வைத்தால் அது வேகமாக செழித்து வளர வேண்டும். அப்படி எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக மரம், செடி, கொடிகள் நட்டு வைத்த உடன் வந்து விடுவதில்லை. ஆனால் ஒரு சிலருடைய கைகளில் நீங்கள் எதை வைத்தாலும் அது விறுவிறுவென நல்ல செழிப்புடன் வளர்ந்து விடும். யாராவது இப்படி நல்ல கை ராசிக்காரர்களாக இருக்கும் பொழுது அவர்களை ‘ராசியானவர்’ என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் அவர் ராசியானவர் என்பதை விட தெய்வீக சக்தி கொண்டவர் என்பது தான் அர்த்தம்.

தெய்வீக சக்தி உங்களிடம் இருக்கும் பொழுது நீங்கள் உங்களுடைய கைகளில் நட்டு வைக்கும் சிறு விதையயும் விருட்சமாக நன்கு வளர்ந்துவிடும். தெய்வீக ஆற்றல் இல்லாதவர்கள் உடைய கைகளில் என்னதான் நல்ல விதையாக பார்த்து நட்டு வைத்தாலும், அதில் இருந்து ஒரு பலனையும் நீங்கள் அனுபவிக்க முடியாது. இதுதான் தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கும், தெய்வீக சக்தி அற்றவர்களுக்கும் இருக்கும் மிக முக்கியமான ஒரு வித்தியாசமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அதே போல நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் மேற்கொள்ளுங்கள். கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். ஒரு 10 நிமிடம் அப்படியே காத்திருங்கள். உங்களுடைய கண்களில் தோன்றும் வெளிச்சமானது நல்ல வெண்மையான நிறத்தில் தோன்றினால் நீங்கள் தெய்வீக சக்தி உடையவராக ஆவீர் அல்லது அதற்கு பதிலாக வெளிச்சம் உடைந்து சிதறி மஞ்சள் நிறத்தில் தோன்றினாலும் நீங்கள் தெய்வீக சக்தி உடையவர் என்பதை அறிந்து கொள்ளலாம். கருப்படைந்த நிறம் அல்லது இருட்டான அடர்ந்த நிறம் தெரிந்தால் உங்களிடம் தெய்வீக சக்தி இல்லை என்பது அர்த்தமாகும்.

இவை மட்டுமல்லாமல் ஒரு மனிதன் தான் தெய்வீக சக்தி உடையவர் என்பதை முழுமையாக மனம் உருகி இறைவனைச் சரண் அடையும் பொழுது தனக்கு தானே உணர்ந்து கொள்கிறான். நீங்கள் மனமுருகி வேண்டும் பொழுது இறைவன் உங்களுடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் தெய்வீக சக்தி உடையவர் என்பதையும், தெய்வ அருள் உங்களிடம் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். தெய்வம் உங்களுடன் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் தெய்வ சக்தி உங்களுக்கு இல்லை.

- Advertisement -