கோலி இல்லாத நிலையில், தோனியும் அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் – என தகவல்

ms-vk

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

toss

இந்திய அணியின் கேப்டன் கோலி ஏற்கனவே ஓய்வு காரணமாக அணியில் இருந்து கடைசி இரண்டு போட்டிகளில் விலகினார். இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்தார் தோனி.

அவரின் உடல்நிலை குறித்து அதன் பிறகு எந்த அறிவிப்பும் இன்றுவரை உறுதிப்படுத்த படாமல் இருப்பதால் அடுத்த போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதனால் தோனி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ms

கோலிக்கு பதிலாக இளம்வீரர் சுப்மான் கில் அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆவது உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி ஒருவேளை நாளைய போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தொடர்ந்து கீப்பராக செயல்படுவார்.

இதையும் படிக்கலாமே :

வெளிநாடுகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் இவரே இந்திய அணியின் சிறந்த பவுலர் – பவுலிங் கோச்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்