இந்த எண்ணெயில் விளக்கேற்றினால் பாவம் தான் வந்து சேரும் தெரியுமா? விளக்கில் ஊற்றக்கூடாத எண்ணெய் எது?

lamp-oil
- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டிலும் தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் நிம்மதி குறையாமலிருக்கும். உங்கள் வீட்டின் மேல் இருக்கும் கண் திருஷ்டி நீங்கும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த வித தீய சக்திகளும் உங்களை நெருங்காது. வற்றாத செல்வமும், வறுமை இல்லா வாழ்வும் உங்கள் சந்ததியினருக்கும் கிடைக்கும். அதனால் தான் தினமும் விளக்கு ஏற்றி வழிபட தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி விளக்கு ஏற்றும் பொழுது நிறைய சாஸ்திர, சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

vilakku1

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் உகந்ததாக இருக்கும். உதாரணத்திற்கு மகாலட்சுமிக்கு நெய் தீபம் மிகவும் உகந்ததாக இருக்கும். இப்படியாக ஒவ்வொரு தெய்வத்திற்கும், ஒவ்வொரு எண்ணெய் ஊற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது. அப்படி இருக்கும் பொழுது இந்த எண்ணெயை மட்டும் விளக்கேற்ற பயன்படுத்தினால் மிகப் பெரிய பாவம் வந்து சேரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி எந்த எண்ணையை நாம் தப்பித் தவறியும் விளக்கேற்ற உபயோகிக்கக் கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

தீபத்தில் ஊற்றும் எண்ணெய் மட்டுமல்ல, அதில் போடப்படும் திரியிலும் சம்பிரதாயங்கள் உண்டு. அவை பரிகாரங்களாக செய்யப்பட்டு வருகின்றன. குடும்பத்தில் மங்களம் உண்டாக சுத்தமான பஞ்சை பன்னீரில் நனைத்து காய வைத்து திரியாக்கி இரண்டு திரிகளாக முறுக்கி தீபமேற்றி வழிபட வேண்டும். தீராத கடன் சுமையால் அவதிப்படுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், சதா சண்டை, சச்சரவுகளுடன் இருக்கும் தம்பதிகள், விளக்கில் சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

color-thiri

வீட்டில் அல்லது தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் ஸ்தலங்களில் தீய சக்திகள் இருப்பதாக உணர்ந்தால் உடனே விளக்கில் வெள்ளை எருக்கன் திரி போட்டு தீபம் ஏற்றி பாருங்கள். தீவினை நீங்கி நன்மைகள் பெருகும். மஞ்சள் திரியினால் அம்மனுக்கும், தாமரைத் தண்டு திரியினால் மகாலட்சுமிக்கும் தீபமேற்றி வழிபட சகல சம்பத்துகளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

- Advertisement -

குல தெய்வ சாபம் இருப்பவர்கள் வாழைத் தண்டு திரியினால் தீபமேற்றி வழிபட சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அது போல் தெய்வ குற்றங்கள் இருந்தால் வெள்ளை வஸ்திரத்தை பன்னீரில் நனைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வீட்டில் விளக்கேற்றும் பொழுது அந்த வீட்டின் பெண்கள் ஏற்றுவது மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்கிறது சாஸ்திரம். திருமணமான பெண் வளையல், மெட்டி, வகிட்டில் குங்குமம் இல்லாமல் தீபமேற்றி வழிபடக் கூடாது.

groundnut oil 2-compressed

தெற்கு திசையை தவிர எந்த திசையிலும் தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். அதுபோல் கடலை எண்ணெயில் மட்டும் தீபமேற்ற கூடாது. அது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. கடலை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு நீங்கி விடுமாம். மேலும் இதனால் குலம் தழைப்பதில் பிரச்சனைகள் வருமாம். அதனால் தான் கடலை எண்ணெயில் தீபம் ஏற்றக் கூடாது என்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே
தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா? தூங்கும் பிள்ளைக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -