அட! தோசைக் கல்லை பழக்கிறதுக்கு இவ்வளவு ஈஸியா ஒரு ட்ரிக்ஸ் இருக்குன்னு இத்தனை நாள் நமக்கு தெரியாம போச்சே. இது தெரிஞ்சு இருந்தா நல்லா மொறு மொறுன்னு தோசை சுட்டு அசத்தி இருக்கலாமே.

- Advertisement -

தோசை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள். அப்படி பிடித்தமான ஒரு தோசையை ஊற்றும் விதமும் பிடித்த மாதிரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதற்கு மாவு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியம் தோசை கல்லும் தான். தோசை கல் சரியாக இருந்தால் தான் நல்ல மெலிதான மொறு மொறு தோசை ஊற்றி சாப்பிட முடியும். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் புதிய அல்லது பழைய தோசைக் கல் எதுவாக இருந்தாலும் மிகவும் எளிமையாக அதை எப்படி பழக்குவது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இப்போதெல்லாம் அதிகம் நான்ஸ்டிக் தவா தான் பயன்படுத்துகிறார்கள். என்ன தான் நான்ஸ்டிக் தவாவில் தோசை ஊற்றினாலும், நாம் இரும்புக் கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை சாப்பிடும் போது அதில் இருக்கும் ருசியும், மணமும் இந்த நான்ஸ்டிக் தவாவில் தோசை ஊற்றி சாப்பிடும் போது கிடைக்காது.

- Advertisement -

நம் வீட்டில் எப்போதும் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் தோசை கல் திடீரென தோசை ஊற்ற வராது. எவ்வளவு தேய்த்தாலும் மறுபடியும் தோசை அதில் ஒட்டிக் கொண்டு திருப்ப வராது அல்லது மாவு ஊற்றும் போது மாவு தோசை கல்லில் ஒட்டாமல் கரண்டியுடன் சேர்ந்து வந்து விடும். இதை எப்படி சரி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இது போல தோசை கல்லில் தோசை ஊற்ற வராமல் இருக்கும் போது கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வெற்றிலையை எடுத்து தோசை கல் மீது வைத்து அதை மீது எண்ணெய் ஊற்றி விடுங்கள். இதற்கு நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம்.

- Advertisement -

எண்ணெய் ஊற்றிய பிறகு வெற்றிலையை ஒரு கரண்டி வைத்து எண்ணெயுடன் சேர்த்து தோசைக் கல் மீது ஒரு ஐந்து நிமிடம் வரை நன்றாக தேய்த்துக் கொடுங்கள். வெற்றிலை முற்றிலுமாக கருகி விடும் வரை தோசை கல்லில் வைத்து தேய்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு காட்டன் துணியால் தோசை கல்லை துடைத்து விட்டு எண்ணெய் தேய்த்த பிறகு தோசை ஊற்றி எடுத்தால் தோசை மெலிதாக நல்ல மொறு மொறு வென்று வரும்.

இதே முறையில் புதிதாக வாங்கிய தோசை கல்லை கூட இரண்டு அல்லது மூன்று முறை இதே போல வெற்றிலை வைத்து எண்ணெய் ஊற்றி தேய்த்து கொடுக்கும் போது தோசை கல்லை சீக்கிரமாக பழக்கி விடலாம். தோசை ஊற்றவும் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: என்ன! ஒரு வாரம் ஆனாலும் மாவு புளிக்காமல் இருக்க இந்த பொருளை யூஸ் பண்ணனுமா. இந்த டிப்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே. வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

தோசை கல்லை பழக இது மிக மிக எளிய வழி. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்ற சமயங்களில் இந்த டிப்ஸை பயன்படுத்திப் பாருங்கள்.

- Advertisement -