என்ன! ஒரு வாரம் ஆனாலும் மாவு புளிக்காமல் இருக்க இந்த பொருளை யூஸ் பண்ணனுமா. இந்த டிப்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே. வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

வீட்டை பராமரிப்பதில் எந்த அளவுக்கு நாம் சின்ன சின்ன இந்த குறிப்புகள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு வேலைகளை சுலபமாகவும் முடித்துக் கொள்ள முடியும். அந்த வகையில் அதிகம் சிரமப்பட்டு செய்யும் சில வேலைகளை சுலபமாக முடிக்கவும், அத்துடன் சேர்த்து பயனுள்ள சில குறிப்புகளும் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ளது. வாங்க அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் எல்லோர் வீட்டிலும் இந்த சின்ன சின்ன பிளாஸ்டிக் டப்பாக்கள் அதிகமாகவே இருக்கும். அந்த பாக்ஸின் அடியில் சின்ன சின்ன துளைகள் போட்டு கொள்ளுங்கள். அதே போல் பாக்ஸின் மேலும் ரெண்டு துளைகள் போட்டு ரப்பர் அல்லது நூல் போட்டு கட்ட வேண்டும். இதை நாம் பாத்திரம் கழுவும் சிங்க் பக்கத்தில் இந்த டப்பாவை கட்டி விட்டால் சாப்பிட்ட பிறகு தூக்கி போடும் பொருட்களை எல்லாம் இதில் போட்டால் சிங்கிலும் அடைப்பு ஏற்படாது அதே நேரத்தில் ஓட்டையில் இருந்து தண்ணீர் வடிந்து விடுவதால் நமக்கு வாடையும் வராது.

- Advertisement -

எப்போதும் இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம் என்று அரைத்து வைப்போம். மாவு அரைத்த இரண்டாவது நாளில் புளித்து விடும். இதனால் அதிகமாக அரைத்து வைத்த மாவையும் உடனே சமைக்க முடியாமல் என்ன செய்வது என்று குழம்பி விடுவோம். இது போன்ற சமயங்களில் மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் முன்பு ஒரு முழு வெற்றிலையை காம்புடன் கிள்ளி மாவின் மீது போடுங்கள். அதன் பிறகு இலையை மறுபடியும் திருப்பி போட்டு காம்பு மாவின் உள்ளே செல்லும்படி அழுத்தி விட்டு மூடி வைத்து விட்டால், ஒரு வாரம் கழித்து எடுத்தால் கூட நீங்கள் அரைத்து உள்ளே வைக்கும் போது மாவு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.

உப்பு ஜாடியில் உப்பை கொட்டி வைத்த பிறகு அதிலிருந்து நீர் விட்டு உப்பு வீணாகி விடும். இதற்கு தேங்காய் சிரட்டை போட்டால் தண்ணீர் விடாமல் உப்பு நன்றாக இருக்கும். அப்படி போடும் தேங்காய் சிரட்டை நேரடியாக போடாமல், தேங்காய் சிரட்டையை தோசை கல் மீது வைத்து நன்றாக சூடு படுத்திய பிறகு, அது சூடு ஆறியவுடன் அந்த உப்பில் போட்டு வைத்தால் எவ்வளவு நாள் ஆனாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

- Advertisement -

வீட்டில் சுத்தம் செய்ய அதிக சிரமப்படும் இடம் இரண்டு ஒன்று கிச்சன் சிங், இன்னொன்று மிக்ஸி ஜாரின் அடிப்பகுதி. இதை எளிதாக சுத்தம் செய்ய, ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் புளித்த மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் டெட்டால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை மிக்ஸி ஜாரை கவுத்து அதன் பின்புறம் ஊற்றி விட்டு, ஒரு பிரஷை வைத்து தேய்த்துப் பாருங்கள. மிக்சி ஜார் பளிச்சென்று மாறி விடுவதுடன் சீக்கிரத்தில் இதில் அழுக்கும் சேராது. இதை கலவையை வைத்து வீட்டில் சிங்க், பைப் இவற்றில் கூட தேய்த்து சுத்தம் செய்யலாம்.

பீட்ரூட் வாங்கி அடுத்த நாளே அது வாடி வதங்கி விடும். இனி பீட்ரூட்டை எடுத்து வைக்கும் போது அதன் மேல் புறம், அடிப்புறம் இரண்டையும் நறுக்கி விட்டு ஒரு பாக்ஸில் வைத்து மூடி பிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனால் கூட பீட்ரூட் புதிதாக வாங்கியது போலவே பிரஷ்ஷாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டு குழாயில் உப்பு கறை படிந்து பார்பதற்க்கே மிகவும் அசிங்கமாக உள்ளதா? இந்த இரண்டு பொருட்கள் போதும் வெறும் 15 நிமிடத்தில் குழாயை புதிது போல மாற்றிவிடலாம்.

இந்த சின்ன சின்ன குறிப்புகளை நீங்களும் தெரிந்துகொண்டால் உங்கள் வீட்டில் நிறைய பொருட்கள் வீணாவதை தடுப்பதுடன் நேரமும், பணமும் கூட அதிக அளவு மிச்சப்படுத்தலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -