காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமா?

cash-water

ஒருவருக்கு வாழ்க்கையில் நேரம் நன்றாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனையின் தாக்கமும் அவர்களுக்கு அதிகமாக இருக்காது. அதுவே ஒருவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டால் போதும், சிறிதளவு கஷ்டங்கள் கூட பெரியதாக பாதிப்பைத் தந்துவிடும். இதேபோல் நாம் யோகத்தோடு இருக்கும் போது பரிகாரங்களில் மீது அவ்வளவாக நம்பிக்கை இருக்காது. ‘பரிகாரங்கள் செய்தால் மட்டும் நன்மை நடந்து விடுமா’ என்று ஏளன பேச்சு பேசுபவர்கள் சிலரும் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நேரம் சற்று தடுமாறும் போது எந்த பரிகாரத்தை செய்தால் நல்லது நடக்கும் என்று தேடி செல்வார்கள். இப்படித்தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால் அந்த பரிகாரத்தை செய்து பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. எந்த ஒரு பயமும், பாதிப்பும் இல்லாத பரிகாரம் தான் இது. நீங்கள் எதிர்பார்த்த பணமாக இருந்தாலும் சரி. எதிர்பார்க்காத பணமாக இருந்தாலும் சரி. திடீர் பண வரவிற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money

எப்போதுமே தண்ணீருக்கு மந்திரத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. இதனால்தான் தண்ணீரை கோவில்களில் தீர்த்தமாக பயன்படுத்துகிறார்கள். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் நமக்கு ஒரு நல்லது நடக்கப் போகிறது என்றால் அதை செய்து பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லையே!

காலையில் எழுந்து பல் துலக்கியவுடன், வெறும் வயிறுரோடு ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டு வடகிழக்கு திசையை நோக்கி நின்று கொள்ள வேண்டும்.  கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள் ‘ஏராளம் தனம் தானியம் தாராளம்’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து பின்பு, வாய் திறந்து அந்த தண்ணீரில் மூன்று முறை காற்றை ஊதி, கண்களை மூடிக்கொண்டே அந்த தண்ணீர் முழுவதையும் குடித்து விட வேண்டும்.

water drink

நீங்கள் மற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க செல்லும் முன்பு அன்றைய தினம் காலையில் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு சென்றால் நிச்சயம் அந்த பணமானது வசூலாகிவிடும். நீங்கள் வரவே வராது என்று நினைத்திருந்த தொகை கூட நிச்சயம் உங்களுக்கு வந்து சேரும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

mom-baby

நம்மில் பலரது வீட்டில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மசூதிக்கு சென்று மந்திரித்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருப்போம். குழந்தைகள் சரியாக சாப்பிட வில்லை என்றால் பால் பாட்டிலிலோ அல்லது தண்ணீர் பாட்டிலிலோ மந்திரத்தை ஓதி, மூன்று முறை காற்றினை ஊதுவார்கள். அப்படி செய்யும் பட்சத்தில் அந்தத் தண்ணீரை அந்த குழந்தைகள் பருகினால் பிரச்சினைகள் தீரும் என்பதும் நம்மில் பலருக்கு நம்பிக்கையாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இப்படி செய்தால் அந்த குழந்தையின் பிரச்சனையும் தீரும். இதை நம்மில் பலபேர் கண்கூடாக பார்த்து இருக்கின்றோம். இதேபோல் தான் மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை உச்சரித்து காற்றை ஊதி பருகும் தண்ணீர் மூலம் நாம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
இந்த மூன்று பொருட்களையும் உங்கள் வீட்டில் ஒன்றாக வைத்துப் பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam kozhikka slogam in Tamil. Panam peruga tips Tamil. Panam peruga valigal Tamil. Panam vara pariharam tamil.