பொலிவிழந்த உங்கள் சருமத்தை மிகவும் அழகாக ஜொலிக்க வைக்க இந்த வழிமுறைகள் மட்டும் போதும்

face
- Advertisement -

கடினமான உழைப்பு இருந்தாலும், அவையும் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை பாதிக்கலாம். வீட்டிலேயே செய்யக்கூடியவை இந்த கிரீம்கள் மூலம் இரண்டிற்கும் புத்துண்ர்ச்சி அளிக்கலாம். இதற்கு ஒரு மணி நேரம் மட்டும் செலவு செய்தால் போதும். மன அழுத்தம் உங்கள் முகத்தின் பொலிவை பாதித்து சருமத்தின் தன்மையையும் பாதிக்கலாம். இந்த சின்ன மாயங்கள் அவற்றை சரி செய்யும். சரும பொலிவின் எதிரி தான் இறந்த செல்கள். மன அழுத்தம் மற்றும் சரும் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான். வாருங்கள் இவற்றை சரி செய்து கூந்தல் மற்றும் முகம் புத்துணர்ச்சி அடைவதற்கான வழியை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சரும பிரச்சனைகளுக்கு இறந்த செல்களும் முக்கிய இதற்கு காரணமாக இருக்கலாம். இறந்த செல்களால் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர் சருமத்துக்குளு ஆழ ஊடுருவிச்செல்ல முடியாமல் அவை தடுக்கின்றன. மைக்ரோ பியட்ஸ் அல்லது இல்லாமல் பல வகையான எக்ஸ்போலியேட்டிங் கிரீம்கள் இருக்கின்றன. அவற்றை ஒரு முறை பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை வெளிக்கொணரலாம். கடைகளிலும் இதற்கு ஏற்ற பல விதங்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். இதனை சரியாக தேர்வு செய்து உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பிரெஷ் கிரீம் – 1 கப், சர்க்கரை – 1 கப், கோப்பை நாட்டு சர்க்கரை – 1/2 கப், பாதாம் – 1/2 கப், ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்,

செய்முறை:
எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும், பிறகு இவற்றை நன்றாக கலந்து கொண்டு உலர்ந்த முகத்தில் வட்ட வடிவில பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளவும். பேஸ்ட் மீதி இருந்தால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் முகம் எப்பொழுதும் பளிச்சென்று இருப்ப இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

- Advertisement -

உங்கள் சரும தன்மைக்கு ஏற்ப ஸ்கர்ப்பை தேர்வு செய்யவும். உலர் மற்றும் மென்மையான சருமம் என்றால் மிதமானது. எண்ணெய் பசை சருமம் என்றால் சற்றே கணமானதை தேர்வு செய்யலாம். ஸ்கிரப் செய்த பிறகு உங்கள் சரும துளைகள் திறந்திருக்கலாம். எனவே இதன் பிறகு டோன் அப் செய்வது முக்கியம். இது துளைகளில் பொருட்கள் தங்கி பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும்.

தினமும் டோன் செய்வது சருமத்திற்கு மிகவும் நல்லது. சுத்தாம்மிய பிறகு மாய்ஸ்சரைசிங் செய்யும் முன் டோன் செய்யவும். படுக்கச்செல்லும் முன்னும் டோன் செய்யவும். ஏனென்றால் வீட்டிலேயே இருந்தாலும் நமது முகத்தில் தேவையற்ற அழுக்குகள் துவாரங்கள் வழியே ஊடுருவி செல்கின்றன எனவே இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யும் பொழுது முகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்க முடியும். ஆகவே முகத்தை டோன் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறான விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் முகப்பிரச்சினை விரைவாக தீர்ந்துவிடும்.

- Advertisement -