துர்க்கை அம்மன் வழிபாடு

durgai valipadu in tamil
- Advertisement -

துன்பத்தில் இருப்பவர்களுக்கு தெய்வமே துணை என கூறுவார்கள். அந்த வகையில் வாழ்வில் மிகக் கடுமையான துன்பங்களை சந்திப்பவர்கள் வழிப்பட்டால் உடனே வந்து உதவும் தெய்வமாக துர்கா தேவி திகழ்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக திகழ்கின்ற துர்க்கை அம்மனை வழிபடுவதற்குரிய சில முறைகள் உள்ளன. துர்க்கை அம்மன் வழிபாடு (Durgai amman valipadu in Tamil) எப்படி செய்தால் நாம் எத்தகைய பலன்களை பெறலாம் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காரியங்களில் வெற்றி

நீண்ட நாளாக தடங்கல்கள் ஏற்படுகின்ற காரியங்கள் வெற்றிகரமாக முடிய மாதத்தில் வருகின்ற வளர்பிறை அல்லது தேய்பிறை தசமி தினங்களில் துர்கா தேவி கோயிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று துர்கா தேவிக்கு மலர்மாலை சாற்றி, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து, தீபமேற்றி வழிபாட்டால் தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

- Advertisement -

ஏதேனும் ஒரு மாதத்தில் வருகின்ற வளர்பிறை தேய்பிறை அஷ்டமி தினத்தில் துர்க்கை அம்பாள் சன்னதிக்கு சென்று, அம்பாளுக்கு சிவப்பு நிற மலர்களான ரோஜா, செவ்வரளி, செம்பருத்தி, செந்தாமரை போன்ற மலர்களை சமர்ப்பித்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் துர்கா தேவி சன்னதியிலோ அல்லது வீட்டிலேயே நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி, துர்கா சப்தசதி எனும் மந்திர ஸ்தோத்திரத்தை துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் துர்கா தேவியின் அருளால் நல்லபடியாக நிறைவேறும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை ராகு காலம்

துர்கா தேவி வழிபாட்டுக்குரிய சிறந்த நேரமாக கூறப்படுவது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை இருக்கின்ற ராகு கால நேரம் தான். இந்த ராகு கால நேரத்தில் சொத்து பிரச்சனை, நீதிமன்ற வழக்குகள், எதிரிகள் தொல்லை போன்ற குறைகள் தீர துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தை அரிந்து அதை அகல் தீபமாக செய்து, அதில் பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

அதே போன்று ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணிக்குள்ளான நேரத்தில் துர்க்கை அம்மன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவளாக திகழ்வதாக தாந்திரிக சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் எலுமிச்சை தீபமோ அல்லது மண் அகல் விளக்கு தீபமோ ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய அனைத்தையும் தருவாள் அன்னை துர்கா தேவி.

- Advertisement -

துர்க்கை வழிபாடு பலன்கள்

துர்கா தேவியை தொடர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு மரணம் குறித்த அச்சங்கள் விலகும். எதையும் எதிர்த்து நிற்கின்ற மனோ வலிமை கிடைக்கும். வாக்கு சித்தி உண்டாகும். எதிரிகள், துஷ்டர்கள் இவர்களை அணுக மாட்டார்கள். நோய் நொடிகள் அண்டாது. அனைத்து காரியங்களிலும் துர்க்கை பக்தர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: திருநாகேஸ்வரம் பரிகாரம்

இத்தனை சிறப்புகள் துர்க்கை தேவி வழிபாடுகளில் இருந்தாலும், துர்கா தேவியை தீவிரமாக வழிபடும் பக்தர்களுக்கு இயற்கையாகவே இல்லற வாழ்வு விடுத்து, துறவறம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்பதால் இல்லற வாழ்வு கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே தீவிரமான துர்கா தேவி (Durgai amman valipadu in Tamil) உபாசனை வழிபாட்டு முறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆன்மீகப் பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.

- Advertisement -