கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருட்களை எல்லாம் தாளிச்சு சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம் அவ்வளவு ருசியாக இருக்கும்! இனி கோதுமை தோசை தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

wheat-gothumai-dosai
- Advertisement -

கோதுமை தோசை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலர்ஜி தான். ஏனென்றால் அதில் இருக்கக்கூடிய கோதுமையின் பச்சை வாசம் தோசை சுடும் பொழுது நீங்குவதில்லை. இதுவே சப்பாத்தி என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள் ஆனால் கோதுமை தோசையை இதுபோல தாளிச்சு ஒரு முறை செஞ்சு பாருங்க, இனி இந்த தோசை தான் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அருமையான ருசியாக இருக்கக்கூடிய, இந்த மொறு மொறு கிரிஸ்பியான கோதுமை தோசை ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டில் செய்யப் போகிறோம்? என்பதை இனி தொடர்ந்து பார்ப்போம்.

கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒன்றரை கப், அரிசி மாவு – கால் கப், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, துருவிய இஞ்சி – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, சிறிய தக்காளி – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

கோதுமை தோசை செய்முறை விளக்கம்:
இந்த கோதுமை தோசை செய்வதற்கு முதலில் ஒன்றைக் கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் கோதுமை மாவு வீட்டில் அரைத்ததாக இருந்தாலும் சூப்பராக வரும் அல்லது நீங்கள் கடையில் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம். கோதுமை மாவுடன் கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் கோதுமை தோசை கிரிஸ்பியாக சூப்பராக மொறு மொறுன்னு வரும்.

இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு மட்டும் உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கோதுமை மாவு தோசை செய்வதற்கு எந்த அளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு கெட்டியாக நீங்கள் நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். இதை அப்படியே 15 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதற்குள் தாளிக்க தேவையான மற்ற எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் காரத்திற்கு தேவையான அளவிற்கு பச்சை மிளகாயை குட்டி குட்டியாக நறுக்கி சேருங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஃப்ளேவருக்காக துருவிய இஞ்சி கொஞ்சம் போல் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு வதக்கிய பின்பு நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வர நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
நார்ச்சத்து நிறைந்த இந்த தோசையை செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும். உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தோசையை ட்ரை பண்ணி பாருங்க.

வெங்காயம் சிவக்க வதங்கி வரும் பொழுது கொஞ்சம் போல் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி லேசாக வதங்கி வரும் பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். மசித்ததும் பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கொள்ளுங்கள். சுருண்டு வந்ததும் அவ்வளவுதான் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். அதன் பிறகு மாவுடன் இதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது சூடான தவா அல்லது தோசை கல்லில் கோதுமை தோசை வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு ரெண்டு புறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டியது தான்! ரொம்ப கிறிஸ்பியாக மற்றும் டேஸ்டியாக இருக்கக்கூடிய இந்த கோதுமை தோசையை இனி யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க ரசிச்சு, ருசித்து சாப்பிடுவாங்க.

- Advertisement -