குலாப் ஜாமுன் மாவை பயன்படுத்தாமலேயே மிகவும் சுவையான குலாப் ஜாமூனை மிகவும் ஈஸியாக செய்திட முடியும்

gulab
- Advertisement -

ஏதேனும் பண்டிகை காலமாக இருந்தால் அன்றைய தினம் ஏதாவது ஒரு இனிப்பை செய்வது என்பது நமது வழக்கமாகும். அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களிலும் அல்லது மாலை நேரங்களிலும் ஏதாவது ஒன்றை சுவையாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும் வழக்கம் தான். அவ்வாறான நேரங்களில் இனிப்பு செய்வதற்கான பொருட்களை சட்டென்று வாங்கும் அளவிற்கு இயலாத போதிலும் அருகே இருக்கும் கடைகளுக்கு சென்று ஒரு 40 ரூபாய் செலவில் ஒரு பொருளை வாங்கி வந்தால் மட்டும் போதும். இந்த சுவையான குலாப் ஜாமுனை உடனே செய்து விடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sweet

தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட் பாக்கெட் – 4, நெய் – ஒரு ஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், மைதா மாவு – 2 ஸ்பூன், பால் பவுடர் – இரண்டு ஸ்பூன், ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன், பால் – அரை கப்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மேரி பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அதில் இருக்கும் பிஸ்கட்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மிகவும் பவுடராக இருக்குமாறு மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இந்த மாவை சல்லடை வைத்து கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவேண்டும்.

biscuit

அதன்பின் இதனுடன் இரண்டு ஸ்பூன் மைதா மாவு, 2 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் அரை கப் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மிகவும் சாஃப்ட்டாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின் கையில் லேசாக நெய் தடவிக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உருண்டைகளாக உருட்டும் பொழுது மாவு வெடிப்புடன் இருந்தது என்றால் அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து பிசைந்து கொண்டு அதன் பின்னர் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, ஒரு கப் சர்க்கரையும் அதனுடன் ஒன்றரை கப் தண்ணீரையும் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவேண்டும். சற்று நேர கழித்து சர்க்கரை தண்ணீரை ஏதேனும் கரண்டியைப் பயன்படுத்தி கைகளால் தொட்டுப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பிசுபிசுப்பான பதத்திற்கு வந்து விட்டது என்றால் அதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து அதனை தணியாக எடுத்து வைக்க வேண்டும்.

sugar-pagu

மீண்டும் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் மிதமான சூட்டிற்கு வந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து அவை நன்றாக சிவந்து வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வைத்திருக்கும் அனைத்து உருண்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

gulab-jamun0

அதன் பின் இந்த உருண்டைகளை சர்க்கரை தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அனைவருக்கும் பரிமாற கொடுத்துப்பாருங்கள். இந்த சுவையான குலாப் ஜாமுனை வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -