கூடுதலாக எந்த பொருளையும் சேர்க்காமல் வெறும் அரிசி மற்றும் உளுந்தை மட்டுமே வைத்து எப்படி இட்லி மாவு அரைப்பது? இப்படி அரைச்சா எதுவும் சேர்க்காமலேயே சாஃப்ட்டான பஞ்சு இட்லி, மொறுமொறு கிரிஸ்பி தோசை சுடலாமே!

dosa-idli-maavu
- Advertisement -

இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது ஒன்றும் கம்பு சுத்துற வேலை எல்லாம் இல்லைங்க. இட்லி, தோசைக்கு மாவு செய்வது பெரிய கஷ்டம் என்று நினைத்து பலரும் கடையில் காசு கொடுத்து வாங்குகிறார்கள். இட்லி, தோசை சாஃப்ட்டாக வருவதற்கு அவல், வெந்தயம் போன்ற பொருட்களைக் கூட சேர்க்காமல் வெறும் அரிசி மற்றும் உளுந்தை மட்டுமே வைத்து எப்படி மிருதுவான இட்லி மற்றும் மொறுமொறு கிரிஸ்பி தோசை தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்க நல்ல இட்லி அரிசி மற்றும் உபரி அதிகம் தரக்கூடிய நல்ல முழு வெள்ளை உளுந்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவல், சோயா, வெந்தயம், சாதம் என்று எதுவும் இப்போது நாம் கூடுதலாக சேர்க்க போவது கிடையாது. நீங்கள் எந்த அளவையை பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவையில் சரியாக தலை தட்டி அரிசியை சேர்க்க வேண்டும். பெரிய படி வைத்திருப்பவர்கள் ஆழாக்கு அரிசியை எடுத்து அதை தலை தட்டி 5 ஆழாக்கு போட வேண்டும். 2 கிலோ அரிசி 5 ஆழாக்கு சரியாக இருக்கும். நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப எந்த டம்ளரில் அளக்கிறீர்களோ அதில் அளந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதே அளவையில் ஒரு ஆழாக்கு முழு உளுந்தை தலை தட்டி சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் தனி தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு தண்ணீர் விட்டு ஓரிரு முறை அலசி பின்னர் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைக்க வேண்டிய தண்ணீர் அரிசியின் அளவை விட அதிகம் இருக்க வேண்டும். உளுந்தையும் அதே போல தண்ணீர் சேர்த்து குறைந்த பட்சம் 3 லிருந்து 4 மணி நேரம் நன்கு ஊற விட்டு விடுங்கள்.

மூன்று மணி நேரம் நன்கு ஊறிய பிறகு முதலில் கிரைண்டரை கழுவி அதில் உளுந்தை சேர்க்க வேண்டும். உளுந்தை அரைக்கும் பொழுது எங்கும் செல்லாமல் அருகிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். சரியாக 20 நிமிடம் தண்ணீரை லேசாக தெளித்து தெளித்து ஆட்டினால் பொங்க பொங்க வெண்ணெய் போல அரைத்து விடும். சிறிது எடுத்து தண்ணீரில் போட்டால் வெண்ணை போல மிதக்க வேண்டும். அந்த அளவிற்கு நைஸாக கட்டிகள் இல்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். கிரைண்டரில் இப்போது ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நைஸாக அரையுங்கள். அரிசி 90% நன்கு அரைபட்டதும் 10 சதவீதம் அரை படாமலும் கொரகொரவென்று இருக்க வேண்டும். இந்த சமயத்தில் மாவிற்கு தேவையான கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இட்லி, தோசை மாவுக்கு எப்பொழுதும் தூள் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்த்து அரை பட்டவுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள உளுந்தையும் அதிலேயே போட்டு ஒரு முறை நன்கு ஓட விடுங்கள். பிறகு எல்லா மாவும் அதிலேயே கலந்து விடும். அதன் பிறகு இரண்டு பெரிய பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று எவர்சில்வர் பாத்திரமாகவும், இன்னொன்று பிளாஸ்டிக் பாத்திரமாகவும் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் வாளியில் இருக்கும் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். எவர் சில்வரில் நாளைக்கு நீங்கள் பயன்படுத்த இருக்கும் அளவிற்கு மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் நன்கு புளித்த பின்பு லேசாக மாவை உடைந்து விடாமல் கலந்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி சுட்டாலும் சரி, தோசை சுட்டாலும் சரி சூப்பராக வரும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -