அட இதெல்லாம் கூட வா ஷார்ப் பண்ணி யூஸ் பண்ணுவாங்க? இத்தனை நாள் இதெல்லாம் கூட தெரியம்மா இருந்துட்டோமே என்று உங்களை யோசிக்க வைக்கும் சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

சமையலறையில் நாம் சமைக்கவும், சமைக்க பயன்படுத்தும் பொருட்களை பாதுகாக்கவும், இப்படியான வேலைகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதில் எத்தனை குறிப்புகள் நமக்கு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேலையை சுலபமாக செய்ய ஏதாவது குறிப்பிருக்குமா என்ற யோசனை இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி யோசிப்பவர்களுக்கான பயனுள்ள குறிப்புகளை பற்றிய பதிவு தான் இது.

நம் எல்லோர் வீட்டிலும் காய் சீவும் சீவல் வைத்திருப்போம். இது அதிக அளவில் கிச்சனில் பயன்படக்கூடிய ஒரு பொருள். இது மொக்கையாகி விட்டால் ஷார்ப்பாக்குவது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் இப்போது அதையும் ஈஸியாக செய்து விடலாம்.  இந்த சீவலில் காய் சீவும் அனைத்து பகுதிகளிலும் அகல் விளக்கு வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். சீவல் புதிதாக வாங்கிய போது இருந்ததை போல் இருக்கும்.

- Advertisement -

வாழைப்பழம் நீண்ட நாள் அழுகாமல் இருக்க வேண்டுமா? ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வாழைப்பழத்தின் காம்பு பகுதி தண்ணீரில் மூழ்கும்படி வைத்து விட்டால் போதும். நன்றாக பழுத்த பழமாக வாங்கி வந்தால் கூட சீக்கிரம் அழுகாது. தண்ணீரை மட்டும் தினமும் மாற்றி கொள்ளுங்கள்.

சிலர் ஆடைக்கு ஏற்ப தினமும் நெயில் பாலிஷ் கலர் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அப்போது ஏற்கனவே வைத்த நெயில் பாலிஷை அழிக்க நெயில் ரிமூவர் பயன் படுத்துவார்கள். இனி அதற்கு பதிலாக சானிடைசர் பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

சேலை சுடிதார் போன்றவை கட்டும் பொழுது விலகாமல் இருக்க பின்னை பயன்படுத்தும் போது அந்த பின்னின் நிறம் தனியாக தெரியாமல் இருக்க, நீங்கள் உடுத்தும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப பின்னில் நெயில் பாலிஷ் போட்டு பிறகு பயன்படுத்தினால் பின் குத்தியிருக்கும் இடமே தெரியாது. அது மட்டும் இன்றி பின் துருப் பிடித்து அந்த கறை துணியில் ஒட்டி கொண்டு துணியும் வீணாகாமல் இருக்கும்.

அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி வைத்தால் நீங்கள் எப்படி வைத்தாலும் எண்ணெய் ஒழுகி அதை வைக்கும் இடங்களில் எண்ணெய் கறை படிந்து விடும். அதற்கு நீங்கள் அகல்விளக்கில் உள் புறம் நெயில் பாலிஷ் தடவி காய வைத்த பிறகு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் ஒழுகாது.

- Advertisement -

தோசைக்கலில் மீன் அல்லது கிழங்கு வகைகள் வறுத்த பிறகு தேய்க்கும் போது அந்த கல்லில் இருக்கும் எண்ணெய் கைகளில் பசை போல பிடித்து தேய்க்கவே கஷ்டமாக இருக்கும். இனி இப்படி வறுத்தப் பிறகு தோசை கல்லில் கொஞ்சம் மைதா மாவு அல்லது கோதுமை மாவு இரண்டில் ஏதாவது ஒன்றை தூவி டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து எடுத்து பிறகு தேய்த்தால் எண்ணெய் கறை கொஞ்சம் கூட இருக்காது.

வீட்டில் காப்பித்தூள் இருக்கும் கண்ணாடி பாட்டில்களில் அது தீர்ந்த பிறகு அந்த பாட்டிலை வேறு எதற்காவது பயன்படுத்த, பாட்டிலின் மேல் உள்ள ஸ்டிக்கரை எடுத்தால் சுலமபாக வராது. அதை சுலபமாக எடுக்க ஒரு கிண்ணத்தில் சுடு தண்ணீர் ஊற்றிய பிறகு அதில் இந்த பாட்டிலை போட்டால் பாட்டில் நன்றாக ஊறி ஸ்டிக்கர் ஈசியாக எடுக்க வரும். அதன் பிறகும் ஸ்டிக்கர் ஒட்டிய கறை தெரிந்தால் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து துடைத்து விடுங்கள். பாட்டில் புதிதாக வாங்கிய போல மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: என்னது ஒரே நேரத்துல சாதம், குழம்பு, சைடு டிஷ், மூணும் செய்யலாமா? அட அது ரொம்ப சிம்பிள்ங்க. வாங்க எப்படின்னு பாக்கலாம்.

முட்டை உடைத்து ஊற்றும் போது எவ்வளவு கவனமாக உடைத்து ஊற்றினாலும் முட்டை ஓடு அதில் கலந்து விடும். அதை எடுத்தால் வழுக்கி கொண்டு போகும். அதற்கு கொஞ்சம் தண்ணீர் தொட்டு நனைத்த பிறகு எடுத்தால் ஓடு ஈசியாக எடுக்க வரும். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -