சமையலறை பொருட்களை இப்படிக்கூட பாதுகாப்பாக வைக்கலாமா? உங்களுக்கு தெரியாத பயனுள்ள சமையலறை குறிப்புகள் 10!

kitchen-tips
- Advertisement -

நாம் நம் வீட்டில் அடிக்கடி மாற்றக்கூடிய பொருட்கள் என்றால் அது சமையலறை பொருட்களாக தான் இருக்க முடியும். அப்படி வாங்கி வைக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பது என்பதே நமக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. எறும்புகள், வண்டுகள், பூச்சிகள் என்று எந்தத் தொல்லையும் இல்லாமல் இருக்க, மற்றும் டென்ஷன் இல்லாமல் சுலபமான முறையில் சமையல் செய்ய இந்த 10 குறிப்புகளும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! அது என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

turmeric

டிப் 1:
முதலில் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் மஞ்சள் தூளை கடைகளில் வாங்காமல் நாமே மஞ்சளை காய வைத்து அரைத்துக் கொள்வது நல்லது. அப்படி அரைத்த மஞ்சளை சூடு ஆறியதும் சிறிதளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொண்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் வண்டு வராமல் இருக்கும். மேலும் கலப்பட மஞ்சளில் இருந்து ஆரோக்கியமும் சிறக்கும். இதே போல எல்லா மசாலாவிலும் உப்பு போட்டு கலந்து வைக்கலாம்.

- Advertisement -

டிப் 2:
நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி நறுக்கும் கத்தி விரைவாக கூர் மழுங்கிவிடும். அதற்கு உடைந்த டைல்ஸ் அல்லது பீங்கான் கப் பின்புறம் வைத்து கத்தியை இலேசாக சூடு பறக்கத் தேய்த்தால் போதும் புதியது போல கூர்மை ஆகிவிடும். பின்னர் நீண்ட நாட்களுக்கு கத்தி மழுங்காமல் இருக்கும்.

cylinder-expiry-date

டிப் 3:
நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவிற்கு கூட காலாவதி ஆகும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா? மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஏ, பி, சி, டி என்னும் வரிசையில் மாதங்களையும், கொடுக்கப்பட்டுள்ள எண்ணையும் வைத்து வருடத்தையும் கணித்து விட முடியும். ஏ என்பது முதல் மூன்று மாதத்தையும், பி என்பது அடுத்த மூன்று மாதத்தையும் இதே போல சி, டி என்பது அடுத்தடுத்த மூன்று மாதங்களையும் குறிக்கிறது. இதை வைத்து எந்த மாதம் வரை எந்த வருடம் வரை எரிவாயு காலாவதி ஆகாமல் இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

டிப் 4:
உடம்பில் இருக்கும் உஷ்ணம் தீர்ந்து குளிர்ச்சி அடைய எப்பொழுதும் தண்ணீரை பருகிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். எனவே அதை எளிமையாக பழக்கப்படுத்துவதற்கும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் ஒரு செம்பு வாட்டர் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து துளசி இலைகளை கழுவி போட்டு வைத்தால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகரிக்கத் துவங்கும்.

butter-vennai

டிப் 5:
கடையிலிருந்து வாங்கிய வெண்ணை பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்யும் பொழுது மிகவும் இறுக்கமாக இருக்கும். அவசரத்திற்கு அதனை எடுத்து பயன்படுத்த முடியாது. அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி வெண்ணெய் மேல் படாதபடி மூடி வைத்தால் போதும். ரெண்டே நிமிடத்தில் வெண்ணை உருகி தளர்ந்துவிடும். பிறகு அதில் இருந்து உங்களுக்கு தேவையான வெண்ணையை டீஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

டிப் 6:
கடையிலிருந்து வாங்கிய பன்னீரை அதிகபட்சம் 15 நாட்கள் வரை தான் உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் அதனை பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீரில் மூழ்கும்படி வைத்து காற்று புகாமல் மூடி பிரிட்ஜில் வைத்தால் போதும், ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக வைத்து தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

wheat

டிப் 7:
நீங்கள் வீட்டில் கோதுமை மாவு அரைக்க விரும்பினால் 2 கிலோ சாதாரண கோதுமை மற்றும் ஒரு கிலோ சம்பா கோதுமை அதனுடன் 30 கிராம் அளவிற்கு சோயா சேர்த்து காய வைத்து அரைத்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும். மேலும் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தரும்.

டிப் 8:
பிறந்த நாள் விழாக்களின் பொழுது வீணாகும் மெழுகு வார்த்திகளை தூக்கி போடாமல் ஒரு ஸ்டவ்வில் இருந்து இன்னொரு பர்னருக்கு பற்ற வைக்க வத்திக் குச்சிகளை தேடாமல் அதற்கு பதிலாக பயன்படுத்தி பார்க்கலாம்.

birthday-candles

டிப் 9:
புதிதாக வாங்கும் பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களை கைகளால் எடுத்தால் சரியாக பிய்ந்து வராது. சிலர் நகங்களால் கீறி பாத்திரத்தில் கீறல்களை விழ வைத்து விடுவார்கள். இதற்கு லேசாக மெழுகுவர்த்தியை பற்ற வைத்து ஸ்டிக்கரின் மீது காண்பித்தால் எளிதாக வந்து விடும். அதன் பிறகு சோப்பு போட்டு கழுவி வைத்துக் கொள்ளலாம்.

டிப் 10:
பொதுவாக பருப்பு வேக வைக்க பயன்படுத்தும் குக்கரில் இருந்து தண்ணீர் அதிகமாகி விட்டால் பருப்பு தண்ணீர் வழிந்து நாசமாகிவிடும். இதனை தவிர்க்க பருப்பு கொதித்த பின் குக்கரின் மூடியை மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு தான் விசிலை மாட்ட வேண்டும். இப்படி செய்தால் தண்ணீர் அதிகமாக இருந்தாலும் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வராமல் பருப்பு எளிதாக வெந்து வரும்.

- Advertisement -