சமையலறை விஷயங்களில் நீங்களும் கில்லாடியாக மாறலாம். இந்த டிப்ஸ்களை தெரிந்து வைத்துக்கொண்டால்.

kitchen-tips
- Advertisement -

வீட்டின் சமையலறை என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறையாகும். ஒரு வீட்டின் தூய்மையையும், பெண்களின் குணத்தையும் அவர்கள் சமையலறையை எப்படி வைத்துள்ளார்கள் என்பதை வைத்தே சிலர் கணித்துவிடுவார். அப்படியான சமையலறை விஷயங்களில் நீங்களும் சாமர்த்யசாலியாக விளங்க உதவும் சூப்பரான 5 டிப்ஸ் இதோ.

kitchen2

டிப்ஸ் 1:
கடையில் இருந்து அல்லது ரேஷனில் இருந்து சர்க்கரையை வாங்கிய உடன் சில சமயம் அது ஈரமாக இருக்கும். அந்த ஈரத்தோடு டப்பாவில் கொட்டி ஸ்டோர் செய்தால் அந்த சர்க்கரையில் இருந்து சில நாட்களிலேயே கெட்டவாடை வரத்தொடங்கும். இதை சரி செய்ய என்ன செய்யலாம். சமைத்து முடித்து விட்டு அடுப்பை அணைத்த உடன், கேஸ் பர்னர் சூடாக இருக்கும். அதன் மேலே அடி கனமில்லாத ஒரு கடாயை வைத்து, அதில் சர்க்கரையைக் கொட்டி ஒரு கரண்டியை வைத்து கிளறி விடுங்கள். அந்த கேஸ் பர்னர் சூட்டிலேயே சர்க்கரையில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுத்தமாக வற்றி விடும். சர்க்கரையின் லேசான சூடு ஆறியதும் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு எக்காரணத்தைக் சர்க்கரையை கடாயில் கொட்டக் கூடாது.

- Advertisement -

டிப்ஸ் 2:
பொதுவாகவே சின்ன மிக்ஸியில் கூட, 1 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு அரைப்பது மிக மிக கஷ்டம். மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக மிளகு ஜீரகம் போட்டால் அது நைஸ் பவுடராக அரையாது. இதற்கு என்ன செய்யலாம். மிக்ஸியின் மேலே இருக்கக்கூடிய அந்த மூடியை எடுத்து விடுங்கள். அதற்கு பதிலாக அதன் மேலே, அதற்கு சரிசமமான ஒரு தட்டை வைத்து, தட்டின் மேலே இருக்க பிடித்துக்கொண்டு, ஒரு முறை கொஞ்சமாக மிளகு சீரகத்தைப் பொடி செய்து பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

mixie1

டிப்ஸ் 3:
என்னதான் அசைவ பதார்த்தங்களை சுத்தமாக கழுவினாலும் அதிலிருந்து வரக்கூடிய ஒரு நீச்சவாடை வந்துகொண்டேதான் இருக்கும். மட்டன் சிக்கன் மீன் இவைகளை சுத்தம் செய்யும் போது இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி சுத்தம் செய்தால், அதில் இருக்கும் அசைவ வாடை முழுமையாக நீங்கிவிடும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் அரிசி ஊறவைத்த தண்ணீரை கொண்டு அசைவ பதார்த்தத்தை ஒரு முறை கழுவலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் இட்லி மாவு தோசை மாவு இருக்கும் பட்சத்தில், அதில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் எடுத்து சிக்கன், மட்டன், மீனிலோ போட்டு ஒரு முறை நன்றாக உங்கள் கையை வைத்து தண்ணீர் ஊற்றி அலசி கழுவி விட்டால் அந்த அசைவ வாடை சுத்தமாக நீங்கி விடும்.

idly-maavu

டிப்ஸ் 4:
சில பேருடைய வீடுகளில் மரத்தால் செய்யப்பட்ட கபோர்ட்களை திறந்தாலே அதில் இருந்து ஒரு வாடை வீசத் தொடங்கும். அந்த வாடையை நீக்குவது எப்படி. உங்களுடைய வீட்டின் டீ பேக் இருந்தால், அந்த டீ பேகுகளை கப்போர்டில் ஒரு ஓரமாக மாட்டி வைக்கலாம். இப்படி செய்தால் கபோர்ட் கதவை திறக்கும் போது கெட்ட வாடை வீசாது. டீ பேக் இல்லாமல் சாதாரணமாக டீ தூள் பயன்படுத்தி, டீ போடுபவர்கள் டீ தூளை ஒரு மெல்லிசான துணியில் போட்டு மூட்டையாக கட்டி அதை அலமாரிகளில் வைக்கலாம்.

tea-powder

டிப்ஸ் 5:
உங்களுடைய வீட்டில் இருக்கும் காலி பெருங்காய டப்பாவை இனி தூக்கிப் போடாதீங்க. அந்த டப்பாவின் மேல் பாகத்தை நீக்கிவிட்டு அதன் உள்ளே மிளகுத் தூளை கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் மேலே அந்த மூடியை போட்டு, இதை மிளகுத்தூள் டப்பாவாக பயன்படுத்திக் கொள்ளலாம். ரசத்திற்கு மிளகுத்தூள் தூள் தூவி விட,  முட்டை ஆம்லெட் மேலே மிளகு தூள் தூவி விட, இது வசதியாக இருக்கும். எது மிளகு டப்பா, எது பெருங்காய டப்பா என்பதை தெரிந்துகொள்ள மிளகுத்தூள் டப்பாவில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். அடையாளம் தெரியும்.

- Advertisement -