அட! சமையல் அறையில் இந்த சின்ன சின்ன குறிப்புகள் எல்லாம் பெரிய பெரிய அளவில் வேலை செய்யும் போலவே. பெண்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 9 குறிப்புகள்.

kitchen tips tamil
- Advertisement -

இல்லத்தரசிகள் கட்டாயம், வீட்டில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சின்ன சின்ன எளிமையான வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சமையல் அறையில் தேவைப்படும் குறிப்பை சமையலறைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம், அப்பப்போ ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

குறிப்பு 1:
அவல் கொட்டி வைத்திருக்கும் டப்பாவில், காம்பு கிள்ளிய வர மிளகாய் 1, பூண்டு காம்பு 1, போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பூச்சி புழு பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்ய, மீதமான புளித்த இட்லி மாவை பயன்படுத்தி பாருங்கள். இட்லி மாவு அடியாகி இருக்கும் அல்லவா. புளித்த அந்த மாவை எடுத்து எண்ணெய் பாட்டிலுக்கு மேலே, உள்ளே வெறும் கையால் தடவி தேய்த்து கழுவினாலே எண்ணெய் பாட்டில்கள் பிசுபிசுப்பு நீங்கி பளிச் பளிச் ஆகும்.

குறிப்பு 3:
வீட்டில் பாத்ரூம் கழுவ, வாசல் கூட்ட தென்னந் துடைப்பம் பயன்படுத்துவோம் அல்லவா. அதில் எவ்வளவுதான் கயிறு, நூல் போட்டு கட்டி வைத்தாலும் லூசாகும், கயிறு அறுபடும். குச்சிகள் கொட்டும். கயிறுக்கு பதில் பிளாஸ்டிக்கில் வரும் டேக் பயன்படுத்துங்கள். அதை இறுக்கமாக போட்டு கட்டி இழுத்து விட்டால் லூசாகது. குச்சிகளும் கீழே சிந்தி வீணாகாது.

- Advertisement -

குறிப்பு 4:
நிறைய தேங்காய் இருக்கிறதா. கை வலிக்க துறுவ முடியவில்லையா. எல்லா  தேங்காய்களையும் ஓட்டுடன் சின்ன சின்னதாக உடைத்து, அதை அப்படியே தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து பின்பு, கத்தியில் எடுத்தால் தேங்காய் சில்லுகள் ஓட்டில் இருந்து சுலபமாக கிடைக்கும்.

குறிப்பு 5:
5 கிலோ அரிசியில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தூவி, கலந்து வைத்தால் புழு பூச்சு அரிசியல் வராது. அரிசியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டால் சாதத்தில் காரமெல்லாம் தெரியாது.

- Advertisement -

குறிப்பு 6:
உளுந்தை கடையிலிருந்து வாங்கிய பின்பு சல்லடையில் கொட்டி சலித்து அதில் இருக்கும் மாவையெல்லாம் நீக்கி டப்பாவில் கொட்டினால் சீக்கிரம் வண்டு வராது.

குறிப்பு 7:
அஞ்சறைப் பெட்டியில் எப்போதும் ஒரு வசம்பு துண்டு போட்டு வையுங்கள். உளுந்து, மஞ்சள் தூள் வடகம் எதிலும் வண்டு வராமல் இருக்கும்.

குறிப்பு 8:
உப்பு கடுகு சீரகம் வெந்தயம் என்று மல்லிகை பொருட்கள் கொட்டி வைத்திருக்கும் எல்லாம் டப்பாவிலும், மரக்கரண்டையை பயன்படுத்துங்கள். மரத்தில் சின்ன சின்ன ஸ்பூன் விற்கின்றது. அந்த மர ஸ்பூனை டப்பாவில் போட்டால், மளிகை பொருட்களின் இருக்கும் ஈரப்பதத்தை எல்லாம் அந்த மரக்கரண்டி ஈர்த்துக் கொள்ளும். மளிகை பொருட்கள் சீக்கிரம் வண்டு பிடிக்காது.

இதையும் படிக்கலாமே: என்ன! ஒரு வாரம் ஆனாலும் மாவு புளிக்காமல் இருக்க இந்த பொருளை யூஸ் பண்ணனுமா. இந்த டிப்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே. வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

குறிப்பு 9:
இது ஒரு முக்கியமான குறிப்பு. பெண்களுக்கு அவசியம் தேவைப்படும் குறிப்பு. மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு நாப்கின் வைத்து, சொல்ல முடியாதா அளவுக்கு நடக்க முடியாத அளவுக்கு வேதனை இருக்கும். எரிச்சல் ஊட்டக்கூடிய கால் ஓரங்களில் கொஞ்சம் ஆக பேசலினை தடவிக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தின் போது நாப்கின் பயன்படுத்துவதன் மூலம், இரண்டு பக்கமும் அரிப்பு எடுக்காமல் இருக்க இந்த குறிப்பு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -