இவ்வளவு ஈஸியா யாராலயும் மோர் குழம்பு வைக்க முடியாது. கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் சட்டென மோர் குழம்பு தயார்.

morkulambu
- Advertisement -

நாளை சமையலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலும் அதற்கு முன் நாளே முடிவு செய்து வாங்கி வைத்து விடுவார்கள். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஒரு படி மேலே போய் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை பிரிட்ஜ்ல் வாங்கி அடுக்கி விடுவார்கள். ஆனால் அவர்களையும் மீறி சில நேரங்களில் சொதப்பி விடும். வீட்டில் வாங்கி வைத்த காய் தீர்ந்து போனது தெரியாமல் அடுத்த நாள் காலையில் தலையை சொரிந்து கொண்டு நிற்பார்கள். இனி அப்படி நிற்க அவசியமே இல்லை. இதோ அதற்கவே இருக்கிறது ஈசி மோர் குழம்பு.

தேவையான பொருட்கள்: தயிர் – 2 கப், துருவிய தேங்காய் – 1 கப், பச்சை மிளகாய் – 4, இஞ்சி –  1 துண்டு, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், பெருங்காயம் தூள் – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் – 5, கடலை மாவு – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்த  பிறகு அதில் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் நான்கு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி இரண்டையும் போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்து தனியே வைத்து விடுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் கடலை மாவு,  வதக்கி வைத்த  இஞ்சி , பச்சை மிளகாய் அதனுடன் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தயிரை கொட்டி, அத்துடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை  சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் அடித்து கலந்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி   மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு கலந்து வைத்திருக்கும் தயிர் தேங்காய் விழுதை அதில் சேர்த்து  கலந்து விட்டு ஒரு தட்டை போட்டு இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள். (தயிர் சேர்த்த பிறகு கொதிக்க கூடாது.) இந்த ஆவியிலே சேர்த்த அனைத்தும் வெந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பில் ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதங்கியதும், பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.   இந்த தாளிப்பை   மூடி வைத்து இருக்கும் மோர் குழம்பில் சேர்த்து விடுங்கள். அவ்வளவுதான் மிக மிக சுலபமான ஈசி எஸ்ட் வே மோர் குழம்பு தயார்.

இதில் உங்களுக்கு ஏதாவது காய் சேர்க்க வேண்டுமென்றால் தண்ணீர் கொதிக்கும் அல்லவா, அப்போது அதில் உங்களுக்கு விருப்பமான காய்களை போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். அதன் பிறகு இந்த அரைத்த தேங்காய் தயிர் விழுது சேர்த்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய் சேர்ப்பதாக இருந்தால் மட்டும் தனியாக வதக்கி இந்த குழம்பு ரெடியான பிறகு கடைசியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -