காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் இந்த வெறும் குருமாவை இவ்வாறு சுவையாக ஒரு முறை செய்து பாருங்கள். 10 தோசை கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள்

kurma
- Advertisement -

இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என இரண்டு வகை சைடிஷ்கள் செய்தாலும் இந்த குருமாவை மட்டுமே பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படி ரோடு கடைகளில் மிகவும் சுவையாக செய்யும் வெறும் குருமாவை எப்படி நமது வீட்டிலும் அதே சுவையில் செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டால் போதும். நாமும் அதனை எளிதாக செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தி விடலாம். வாருங்கள் இந்த குருமாவை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

coconut-chutney0

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 5, தக்காளி – 5, பூண்டு – 10 பல், இஞ்சி – சிறிய துண்டு – 2, காய்ந்த மிளகாய் – 5, பச்சைமிளகாய் – 5, தேங்காய் – அரைமூடி, பொட்டுக்கடலை – ஒரு கைப்பிடி, உப்பு – ஒன்றரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

onion

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை சிறிது வதங்கியதும் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பிறகு இவற்றை இறக்கி ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

இவை நன்றாக ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அரை மூடித் தேங்காய் மற்றும் ஒரு பிடி பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பெஸ்ட் பதத்திற்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

onion-chutney1

பிறகு மீண்டும் அடுப்பை பற்றவைத்து கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கி விட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு மிளகாய் தூள் வாசனை போகும் வரை மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இவை சிறிது நேரம் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை கலவையை இதனுடன் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

thakkali-kuruma

அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை குருமா தயாராகிவிட்டது. இதனை இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். தட்டில் வைக்க வைக்க சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -